முகக்கவசம், மருந்துகளை வீட்டிலிருந்தே பெற 'போஸ்ட் இன்ஃபோ' செயலி: அஞ்சல்துறை புதிய முயற்சி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, April 30, 2020

முகக்கவசம், மருந்துகளை வீட்டிலிருந்தே பெற 'போஸ்ட் இன்ஃபோ' செயலி: அஞ்சல்துறை புதிய முயற்சி

முகக்கவசம், மருந்துகளை வீட்டிலிருந்தே பெற 'போஸ்ட் இன்ஃபோ' செயலி: அஞ்சல்துறை புதிய முயற்சி
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அஞ்சல் துறை புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுவதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வருமானம் இன்றி வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதனிடையே கொரோனாவின் வீரியம் குறையாத காரணத்தினால் மேலும் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிதும் ஏழை எளிய பாமரமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை, செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் பெயர் 'போஸ்ட் இன்ஃபோ'. இதனைப் பதிவிறக்கம் செய்த பின்பு தேவையான கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்த பின்னர், கோரிக்கையின் நிலையை அறிய பயனருக்கு ஒரு தனித்துவமான குறிப்பு எண் உருவாக்கப்படும். அதன் பின்னர் மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் மக்களின் வீட்டு வாசலிலேயே வழங்கப்படும். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான இச்செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மூத்த அலுவலர் கூறியதாவது;கொரோனா ஊரடங்கு காரணமாக எங்களுடைய சேவைகளில் எவ்விதமான வீழ்ச்சியும் ஏற்படவில்லை. எங்கள் ஊழியர்கள் இந்த மன அழுத்த சூழ்நிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கின்றனர். வழக்கமான சேவைகளைத் தவிர, மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்றவாறு, அவர்களுக்கு தேவையான மருந்துகள், முகக்கவசங்களை வழங்கி கொண்டிருக்கிறோம்.வாடிக்கையாளர்கள் தபால் சேவைகள், அஞ்சல் வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் என அனைத்து தபால் சேவைகளையும் தடையின்றிப் பெற்று கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Post Top Ad