மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்
மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும்போது முதலில் வலி அதிகரிக்கலாம்.
வியர்வை
ஒருவர் கடுமையான வியர்வையால் அவஸ்தைப்பட்டு அசௌகரியத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அதிகமான வியர்வை வந்தால் அவையும் மாரடைப்பு வர போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் தான்.
மார்பு மற்றும் கைகளில் வலி
மார்பு மற்றும் கைகளில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். அதுவும் தாங்க முடியாத அளவில் வலியை அனுபவிக்க நேரிடும். இம்மாதிரியான தருணத்திலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மயக்க உணர்வு
மூளைக்கு அனுப்பப்படும் ஆக்ஸிஜனின் அளவு குறையும் போது, தலைச்சுற்றல் அல்லது மயக்க உணர்வை அனுபவிக்கக்கூடும். ஏனெனில் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, இதயத்தால் உடலுக்கு இரத்தத்தை அனுப்ப முடியாமல், மயக்க நிலை ஏற்படும்.
அடிவயிற்று வலி
குமட்டல் அல்லது வாந்தியுடன் அடிவயிற்றில் வலி இருந்தால், அது மாரடைப்பை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக அதிகாலையில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால், அது மாரடைப்பு வர போகிறது என்று தான் அர்த்தம்.
மூச்சுவிடுவதில் சிரமம்
மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேர்ந்தால் அதுவும் மாரடைப்பு வரப் போவதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
பலவீனமாக கணப்படுதல்
ஒருவரின் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளதோ, தசைகளால் தனது முழு செயல்பாட்டையும் செய்ய முடியாமல் போய் பலவீனமாகிவிடும். மேலும் உடலில் தசைகள் பலவீனமாக காணப்பட்டால் எப்பொழுதும் சோர்வுடன் இருப்பது போன்ற நிலை ஏற்படும்.
குறிப்பு
மேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் சமீப காலமாக உணர்ந்து வந்தால் அவற்றை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகி பிரச்சனையைக் கூறி உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதனால் மாரடைப்பினால் உயிரை விடுவதைத் தடுக்கலாம்.