கிரீன் ஸோன் பகுதிகளில் ஊரடங்கு தளர்வு... தமிழகத்தில் எந்த மாவட்டங்களுக்கு பலன்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, April 23, 2020

கிரீன் ஸோன் பகுதிகளில் ஊரடங்கு தளர்வு... தமிழகத்தில் எந்த மாவட்டங்களுக்கு பலன்?

கிரீன் ஸோன் பகுதிகளில் ஊரடங்கு தளர்வு... தமிழகத்தில் எந்த மாவட்டங்களுக்கு பலன்?
கொரோனா பாதிப்பு இல்லாத பசுமை மண்டலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு எந்தெந்த கடைகள் திறக்கலாம் என்பது குறித்தும் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த 28 நாளில் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும், '23 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை' என்றும் கூறினார். இந்த பசுமைப் பகுதிகளில் விரைவில் ஊரடங்கு தளர்த்தப்படும் என கூறியுள்ளார்.

அந்த வகையில் பார்த்தால் தமிழகத்தில் கிருஷ்ணகிரிமாவட்டத்திற்கு மட்டும் ஊரடங்கு தளர்த்த வாய்ப்பு உள்ளது.ஏனென்றால் அங்கு மட்டும் தான் தமிழகத்தில் ஒரு கொரோனா பாதிப்பு கூட கண்டறியப்படவில்லை. தருமபுரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு என்பதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு இருக்கும் என தெரிகிறது. அதே போல் அரியலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் ஆரஞ்ச் சோனில் வரும் என்பதால் அங்கும் ஓரளவு ஊரடங்கு தளர்வு இருக்கும் என கூறப்படுகிறது.

Post Top Ad