அரசுப் பள்ளிகளில் வீணாகும் அரிசி, பருப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 29, 2020

அரசுப் பள்ளிகளில் வீணாகும் அரிசி, பருப்பு

அரசுப் பள்ளிகளில் வீணாகும் அரிசி, பருப்பு


அரசு பள்ளிகளில், மதிய உணவுக்கு வழங்கப்பட்ட, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை, டன் கணக்கில் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, மதிய உணவு திட்டம் அமலில் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு கூடம் அமைக்கப்பட்டு, மாணவ - மாணவியருக்கு, மதிய உணவு வழங்க, ஒன்றரை மாதத்துக்கு முன், அரசின் சார்பில், பொருட்கள் வழங்கப்படும்.


தற்போது, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஒன்றரை மாதத்துக்கான பொருட்கள் பயன்படுத்தப் படாமல், பள்ளி சத்துணவு கிடங்குகளில் உள்ளன. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட, இந்த பொருட்களை அப்படியே விட்டால், அவை பயன்படுத்த முடியாத அளவுக்கு வீணாகும் நிலை உள்ளது. அவற்றை அகற்றாவிட்டால், டன் கணக்கில் பொருட்கள் வீணாகி, பல கோடி ரூபாய் நஷ்டமாகும்.

எனவே, தமிழக பள்ளி கல்வி துறையும், சமூக நலத் துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து, பள்ளிகளில் தேங்கியுள்ள மதிய உணவு பொருட்களை, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்த வேண்டும். அவற்றை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இலவச உணவு தயாரிக்க பயன்படுத்தலாம் என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Post Top Ad