கொரோனா வைரஸ்,முகக்கவசத்தில் ஒரு வார காலமும், ரூபாய் நோட்டு, ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் ஒரு நாள் முழுக்க உயிருடன் இருக்கும் என்று, கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
” வீட்டில் பொருட்களை சுத்தப்படுத்தப் பயன்படும் அனைத்து விதமான பொருட்களிலும் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க முடியும். உதாரணமாக ப்ளீச்,சோப்புப் போட்டு தண்ணீர் ஊற்றி கைகளை அடிக்கடி கழுவுவதாலும் கொரோனாவை அழிக்க முடியும்.
ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் கொரோனா தொற்றினால் நான்கு நாட்கள் வரை ஒட்டிக்கொண்டிருக்க முடியும். மருத்துவத் துறையில் பயன்படுத்தும் முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் ஒரு வாரம் வரை கொரோனா வைரஸ் தொற்று வாழும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ஜிகல் முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் கொரோனா வைரஸ்தொற்று ஏழு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். அதனால்தான், சர்ஜிகல் முகக்கவசத்தை அணிவதாக இருந்தால், அதன் வெளிப்புறத்தை நிச்சயமாகத் தொடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.ஒரு வேளை முகக்கவசத்தை வெளிப்புறமாகத் தொட்டுவிட்டு அப்படியே கையால் கண்ணைத் தொட்டுவிட்டால், அந்த வழியாக கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள விரும்பினால், உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும், முகம், வாய், மூக்கு ஆகியவற்றை தொடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source: Asianet Tamil