Flash News : ஏப்ரல் 20 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி ? - மத்திய அரசு விளக்கம். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 15, 2020

Flash News : ஏப்ரல் 20 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி ? - மத்திய அரசு விளக்கம்.

Flash News : ஏப்ரல் 20 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி ? - மத்திய அரசு விளக்கம்.
*ஏப்ரல் 20 ம் தேதி முதல்;100 வேலை நாள் திட்டத்துக்கு அனுமதி- மத்திய அரசு

*விவசாயம், தோட்டக்கலை, விவசாய மண்டிகள், பன்னைத்தொழிலுக்கு அனுமதி

*தச்சர், பிளம்பர், எலக்ட்ரீசியன்,மெக்கானிக் போன்றோர் வேலை செய்யலாம்.

*நகரத்துக்கு வெளியே இருக்கும் சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி- மத்திய அரசு

*சமூக இடைவெளி விட்டு பணிகளை மேற்கொள்ளலாம்

*மாவட்ட, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில் சேவைகளுக்கு  மே 3 ம் தேதி வரை தடை தொடரும்.

* லாரி பட்டறைகள் , விவசாய இயந்திர பட்டறை, நெடுஞ்சாலை தாபா, உர விற்பனை கடைகள், மீன்பிடித்தல் மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு

*பொது இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் முககவசம் அனிவது கட்டாயம்

*பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்.

*கல்வி நிலையங்கள், பயிற்சி நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், திரையரங்குகள், மால் போன்றவை இயங்க தடை தொடரும்- மத்திய அரசு

*டாக்சி, ஆட்டோ இயங்க அனுமதியில்லை

*கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தளர்வுகள் பொருந்தாது என மத்திய அரசு அறிவிப்பு

*மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்

*இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

Post Top Ad