Income Tax : 2020-21 வருமான வரி திட்டமிடலின் அவசியம்
2020-2021 ஆண்டிற்கான வருமான வரி படிவம் தற்போது தயார் செய்து அதற்கேற்ப வருமான வரி பிடித்தம் செய்ய திட்டமிட்டுக் கொள்ளலாம்.ஏனென்றால் ஜனவரி மாதம், ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வு பெற்றவர்களும் மற்றும் ஜூலை மாதம் அக்டோபர் மாதம் ஊதிய உயர்வை பெற இருப்பவர்களும் ஊதியத்தை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
அக விலைப்படி உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப் பயன் இல்லாதால் வருமான வரி படிவத்தை தற்போதே பூர்த்தி செய்து திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
ஊதியத்தில் 50% அல்லது 30% வெட்டு இருக்குமா? என்பதும் தெரியவில்லை என்பதால், வருமான வரியை அளவாக பிடித்தம் செய்வது நல்லது.
ஏனென்றால் இந்த வருடம் பெரும்பாலானோருக்கு, 30% வரி, 20 % வரி கடந்த ஆண்டை விட குறைவாகவே வரும் என்பதால், அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
சிலருக்கு இந்த வருடம் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட முறையில் கணக்கீடு செய்தால், வருமான வரி கணிசமாகக் குறையலாம்.
உதாரணமாக ரூ 75,900 அடிப்படை ஊதியம் ( ஆண்டு ஊதிய உயர்வு ஜுலை) பெறுபவருக்கு,
பழைய முறையில் வருமான வரி (4% Sur Charge உட்பட)
ரூ 1,05,636
ஆனால் புதிய முறையில் வருமான வரி ரு 69,477 மட்டுமே.
அகவிலைப்படி மற்றும் சரண்டர் இல்லாததால், ஆண்டு மொத்த ஊதியமே, எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே வருவதால், சிலருக்கு வரியே வராமலும் இருக்க வாய்ப்புண்டு.
ஆகவே திட்டமிட்டு செயல்படுவீர்!
கொரோனா முழு அடைப்பினால், அரசின் வருவாயில் பெருமளவு பாதிப்பு இருப்பதால், ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் வெட்டு வந்தாலும் அல்லது வருமான வரியில் சில மாற்றங்கள் வந்தாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.