அறிவியல் உண்மை - தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை ?

அறிவியல் உண்மை - தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை ?



விசைப்பலகையில் எழுத்துகள் தட்டெழுத்தரின் வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன;


 அதாவது மிகுதியாகப் பயன்படும் எழுத்துகள் விரைவாகவும், எளிதாகவும் தட்டெழுத்தரின் விரல்களுக்கு எட்டும் வண்ணம் அமைந்திருப்பதைக் காணலாம். அதிக அளவில் புழங்கும் பெரும்பாலான எழுத்துகள் விசைப் பலகையின் மத்திய வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன; இவ்வரிசை எழுத்துகள் மீதுதான் தட்டெழுத்தரின் விரல் நுனிகள் சாதாரண நிலையில் படிந்திருக்கும்.

ஆனால் தற்போது புழக்கத்தில் இருந்துவரும் குவெர்ட்டி (qwerty) ஆங்கில விசைப்பலகை முழுத் திறன் பெற்றதென்று கூற முடியாது. எடுத்துக்காட்டாக அதிக அளவு பயன்படும் e என்ற ஆங்கில எழுத்து மத்திய வரிசையில் இல்லை; மேலும் இரு கைகளின் சுண்டுவிரல்களும் கடுமையாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. இவையெல்லாம் தற்போதுள்ள விசைப் பலகையின் சில குறை பாடுகள்.

இக்குறைகளையெல்லாம் நீக்கி, புதுவகை விசைப்பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும் தட்டெழுத்தர்களின் ஆர்வமின்மையாலும், பழைய முறையே பழக்கப்பட்டு விட்டதாலும், திருத்தம்பெற்ற புது விசைப்பலகைகள் நடைமுறைக்கு வரமுடியாமற் போய்விட்டன.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive