Neet - பாட திட்டம் மாற்றமா?
'நீட் பாட திட்டத்தை, இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்யும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளிலும், இந்திய மருத்துவ முறையான, ஆயுஷ் மருத்துவ படிப்புகளிலும் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மே, 3ம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.அதனால், மே மாத இறதியில், தேர்வு நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நீட் தேர்வுக்கான பாட திட்டம் மாற்றப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாயின. இதுதொடர்பாக, நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நீட் தேர்வு குறித்த பாட திட்டத்தை, தேசியதேர்வு முகமை மேற்கொள்ளாது.
இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., மட்டுமே முடிவு செய்யும். தற்போதைய நிலையில், ஏற்கனவே அறிவித்த பாட திட்டத்திலேயே தேர்வு நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.