Smart Techno Teachers Team - ஆசிரியர் குழு மூலமாக இணையவழி இலவச கணினி பயிற்சி!
கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்களுக்கு தற்பொழுது இணையவழி இலவச கணினி பயிற்சி S3T (Smart Techno Teachers Team) ஆசிரியர் குழு மூலம் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பு தினமும் 1.30 மணி நேரம் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் அடிப்படை கணினி பயிற்சி முதல் வீடியோ உருவாக்கம், இணையவழி மதிப்பீடு செய்தல் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான இணைய மற்றும் ஆன்ட்ராய்டு பயன்பாடுகள் சார்ந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. இவ்வகுப்பில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.தினமும் நடைபெறும் வகுப்பினை ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள https://s3t.in/இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மேலும் இணையவழிப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சியினை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி ஆசிரியர் மாதவலாயம் அரசு மேல் நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் எஸ். சுரேந்திரன் அளித்து வருகிறார்.