' Zoom ' ஆப்; கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் 'ஜூம்' ஆப்பை பயன்படுத்த வேண்டாம் என, கல்லூரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபகாலமாக 'ஜூம்' என்ற மொபைல் ஆப், அனைவராலும் இலவசமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்பை பயன்படுத்திய ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், மேலாண் கல்லுாரிகளுக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் 'ஜூம் ஆப், ஆன்லைனில் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், அதை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த வேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.