10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 1,458 தினக்கூலி ஊழியர்கள் பணிவரன்முறை: அரசு செயலாளர் அவசர கடிதம்
சென்னை: 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 1,458 தினக்கூலி ஊழியர்கள் பணிவரன்முறை செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக, அரசு செயலாளர் மணிவாசன், நீர்வள பிரிவு முதன்மை தலைமை பொறியாளர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் அரசு கட்டிடங்களை பராமரிப்பது, நீர்வள ஆதாரத் துறையின் கீழ் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்வள ஆதாரங்கள் அனைத்தையும் பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.