பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் 2 வாரம் தள்ளி வைக்க திட்டம்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, May 21, 2020

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் 2 வாரம் தள்ளி வைக்க திட்டம்?

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் 2 வாரம் தள்ளி வைக்க திட்டம்?

ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தை, அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்க, பள்ளி கல்வி துறை ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்களை, திருத்தும் பணி, வரும், 27ம் தேதி துவங்க உள்ளது.'இ - பாஸ்'இதற்காக விடை திருத்தும் முதுநிலை ஆசிரியர்கள், 26ம் தேதி பணிக்கு வர வேண்டும் என, கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மாவட்ட எல்லைகள், 'சீல்' வைப்பால், ஆசிரியர்கள் பணிக்கு வர முடியாத சிக்கல் நிலவுகிறது. இது குறித்து, முதுநிலை ஆசிரியர்கள் கூறியதாவது: வெளி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு, வர போக்குவரத்துவசதியில்லை.'இ - பாஸ்' அனுமதியும் கிடைக்கவில்லை.

பெரும்பாலான ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள், குறைந்த பட்சம், 60 கி.மீ.,க்கு அப்பால் உள்ளன. கொரோனா பாதிப்பால், மாவட்ட எல்லைகள், 'சீல்' வைக்கப்பட்டுள்ளதால், சொந்த வாகனங்களில் பணிக்கு செல்ல முடியவில்லை.இந்நிலையில், வரும், 27ம் தேதி விடை திருத்தம் துவங்கினால், 50 சதவீதஆசிரியர்கள் கூட பணிக்கு வர முடியாது. எனவே, ஊரடங்கு முடிந்ததும் விடைத்தாள் திருத்தத்தை துவங்கலாம்.

ஆசிரியர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளி களில், விடைத்தாள் திருத்தப் பணியை ஒதுக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு :

ஆசிரியர்களின் வசிப்பிட விபரங்களை, தலைமை ஆசிரியர்கள் வழியே சேகரித்து, பணிகளை எளிதாக ஒதுக்கினால், ஆசிரியர்களும் மனநிறைவுடன் பணிகளை செய்வர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், விடைத்தாள் திருத்த பணியை, இரண்டு வாரம் தள்ளி வைக்க, பள்ளி கல்வி துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆகஸ்ட்டில் தான் உயர்கல்வி சேர்க்கை துவங்கும்; அதற்கு, ஜூலை, 15க்குள் தேர்வு முடிவு களை அறிவித்தால் போதுமானது.

எனவே, ஜூன், 8ல் விடைத்தாள் திருத்த பணிகளை துவங்கினால்,அந்த மாத இறுதிக்குள் முடிவுகளை வெளியிட வாய்ப்புஉள்ளதாக, பல்வேறு முதுநிலை ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், அதிகாரிகளிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.எனவே, ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படும் வரை, விடைத்தாள் திருத்தப் பணிகள் தள்ளி வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad