ஒரு பஸ்சில் ஏற 25 பேருக்கு!அனுமதி

கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்து வைத்துள்ளோம். பஸ்கள் இயக்கப்படும் போதும், தினமும், இது கடைப்பிடிக்கப்படும். டிப்போவில் இருந்து, பஸ் புறப்படும் போதும், இரவில் டிப்போவுக்கு திரும்பும் போதும், கிருமி நாசினி தெளிக்கப்படும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக, பஸ்சுக்குள், 25 பயணியர் மட்டுமே ஏற்றப்படுவர்.
20 பேர், இருக்கையில் அமரவும், 5 பேர் நின்றபடி பயணிக்கவும் அனுமதிக்கப்படுவர்.நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், பயணியர், ஓட்டுனர், நடத்துனர் என, அனைவரும், கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணியாதவர்களுக்கு, பஸ்சில் ஏற அனுமதி இல்லை. 'ஏசி' கிடையாதுபஸ்களிலும், பஸ் நிலையங்களிலும், பயணியர் இடைவெளி விட்டு நிற்பதற்காக, வண்ணக் கோடுகள் வரைய உத்தரவிடப்பட்டு உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஓட்டுனர், நடத்துனர்களுக்கு, காய்ச்சல், சளி பரிசோதனைகள் செய்து, கிருமி நாசினி திரவத்தால், கைகளை சுத்தம் செய்து, கையுறை அணிந்த பின் தான், பணிபுரிய அனுமதிக்கப்படுவர். 'ஏசி' தவிர்த்து, ஜன்னல்களை திறந்து வைத்து, பஸ்கள் இயக்கப்படும்.பயணியரிடம், தினசரி மற்றும் மாதாந்திர கட்டண அட்டைகளையும், 'ஆன்-லைன்' வழியான டிக்கெட் கட்டணத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஆலோசனைமுதலில், கொரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும், வரும், 18ம் தேதி முதல், இதை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளது. பின், படிப்படியாக பயணியரின் எண்ணிக்கையையும், மாவட்டங்களையும் அதிகரிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, சிவப்பு மண்டலங்களில், மத்திய அரசின் வழிகாட்டுதல் பெற்ற பின்னரே, பொது போக்குவரத்தை துவங்கலாம் என, முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.இந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது குறித்தும், ஊரடங்குக்குப் பின், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த பகுதிகளில், எத்தனை பஸ்களை இயக்குவது என்பது குறித்தும், இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இருக்கைகளில், 'ஸ்டிக்கர்'போக்குவரத்து கழக தொழில்நுட்ப பணியாளர்கள் கூறியதாவது:தொடர்ந்து, 40 நாட்களுக்கு மேலாக, பஸ்கள், ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், 'பேட்டரி' இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன; டயர்களில் காற்றழுத்தம் குறைந்திருந்தது.
அதேபோல, இன்ஜின், 'ரேடியேட்டர்' உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை, தற்போது ஆராய்ந்து சரி செய்து, இயக்கி பார்த்து வருகிறோம். பயணியர் அமரும் வகையில், பஸ் இருக்கைகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டி வருகிறோம். இதன்படி, ஒரு இருக்கையில் உள்ள பயணி இறங்கிய பின் தான், அடுத்தவர் ஏற முடியும். இந்த வகையில், முதல் கட்டமாக, 50 சதவீத பஸ்களை இயக்கும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.