தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி இங்கு நடைபெறவில்லை.
12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது.
சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி இங்கு நடைபெறவில்லை. இங்குள்ள விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.
ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்துள்ளது. கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி விட்டு பணி செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது