மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்த இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக 24.3.2020 முதல் 3.5.2020 வரை தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
3.5.2020க்கு பிறகு கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை வகுக்க, தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) எஸ். கிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தனது இடைக்கால அறிக்கையை இன்று (1.5.2020) முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது.