டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, May 25, 2020

டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்டவை வரும் ஜூலை 31 வரையில்அவகாசத்தை நீட்டித்து என அரசு அறிவித்துள்ளதுகொரோனா வைரஸ் அச்சுற்றுத்தல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி நாடு தழுவிய முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து கடந்த 17 ம் தேதி முதல் வரும் 31 ம் தேதி வரையில் ஒரு சில தளர்வுகளுடன் 4 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.ஊரடங்கு கால கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் செயல்படவில்லை .மேலும் பொது போக்கு வரத்தும் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக தனி நபர்கள், கல்வி நிறுவனங்களின் வாகனப்போக்குவரத்தும் நடைபெற வில்லை. 

இதனிடையே தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பது மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கான ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை கட்டுவது போன்றவற்றில் சிக்கல் ஏற்பட்டது.இதனையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மோட்டார் வாகன அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. 
மேலும் அனைத்து மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வரும் ஜூன் மாதம் 30 ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஜூன் 30 வரையில் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

தற்போது அவை ஜூலை 31 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து எந்த வித அபராத கட்டணம் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post Top Ad