தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, May 21, 2020

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவிப்பு

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவிப்பு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான நந்தகுமார் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், "கொரோனா பரவும் இந்தச் சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைத்ததற்காக பள்ளிக் கல்வித் துறையை பாராட்டுகின்றோம். பள்ளிக் கல்வி மேம்பட பள்ளிகள் திறப்பது தொடர்பாக சமூக பாதுகாப்புடன் நோய் தொற்று ஏற்படாமல், எப்படி பள்ளியை சிறப்பாக நடத்துவது என வல்லுநர்கள் குழு வழங்கிய ஆலோசனைகளும், தனியார் பள்ளிகளின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளும்:

1. 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் சேர்க்கை நடத்தவும், அவர்களுக்கு தேவையான நோட்டுப்புத்தகங்களை வழங்கவும் ஜூன் 15 ம் தேதி முதல் 30 ம் தேதிவரை அனைத்து தனியார் பள்ளிகளையும் திறந்திட அனுமதி வழங்க வேண்டும்.

2. ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறந்து பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும். அந்த நேரம் இதேபோல்கொரோனா நோய்த்தொற்று குறையாமல் இருந்தால் எல்.கே.ஜி முதல் 5 ம் வகுப்புவரை ஒருநாளும், மறுநாள் 6 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை என, ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளியை நடத்த அனுமதிக்க வேண்டும்.

3. பள்ளி வாகனங்களில் மாணவர்களை அழைத்து வரும்போழுது தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதில் எந்த பிரச்னையும் வராது. வாகன வசதிகள் இல்லாத பள்ளிகளில், மாணவர்களை பெற்றோர்களே அழைத்துவந்து பள்ளியில் விட்டு, மீண்டும் அழைத்துச் செல்லலாம்.

4. முகக்கவசம், கை கவசம் போன்றவற்றை மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே அணிந்து வரலாம். பள்ளியில் நுழைந்ததும்சுகாதாரத்துடன் கூடிய சானிடைசர் வழங்கி கை, கால்களை கழுவ வைத்து தகுந்த இடைவெளியுடன் ஒரு வகுப்பறையில் 10 முதல் 15 மாணவர்களை மட்டும் அமரவைத்து பாடம் கற்பிக்கலாம்.

5.நோய்த் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பள்ளி திறப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்டத்தின் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

6. பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் காய்ச்சல், இருமல், தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளதா என 15 நாள்களுக்கு ஒருமுறை பள்ளி நிர்வாகமே மருத்துவ பரிசோதனை செய்து பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து தரமானகல்வியை உறுதி செய்ய வேண்டும்.

7. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளி எந்த மாவட்டத்தில் உள்ளது என்பதை பெற்றோர்கள் அறிந்து அதற்கு ஏற்ப விடுதியின் சுற்றுப்புற சுகாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள், மாணவர்களின்விருப்பத்தின் பேரில் ரெசிடென்சியல் ஸ்கூல் விடுதிகளில் தங்கிப் படிக்கவும், உண்ணவும், உறங்கவும் வாய்ப்புகளை உறுதிப்படுத்தி பிறகு பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும்.

8. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களை அரசு பள்ளிகளில் வழங்குவது போல, தமிழ்நாட்டின் அனைத்து தனியார் பள்ளிகளிலும் இலவசமாக வழங்க வேண்டும்.

9.திறந்தவெளி விளையாட்டு மைதானம், கலையரங்கம், பெரிய வகுப்பறைகளில் மாணவர்களை தகுந்த இடைவெளியோடு அமரவைத்து குருகுல முறைப்படி ஆசிரியர்கள் கற்பித்தலை உறுதி செய்வோம்.

10. தனியார் பள்ளிகள் அனைத்தும் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்துவது இல்லை என உறுதிசெய்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகளின் வாகனங்களை இந்த ஆண்டு எப்.சி. செய்யாமல் ஓட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்புஅரசாணை வெளியிட வேண்டும்.

11. கடந்த காலங்களில் நிலவேம்பு கசாயத்தை வழங்கியதுபோல, கபசுர குடிநீரை அரசு 15 நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்களை கொண்டு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்" எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Post Top Ad