
'தினமலர்' மற்றும், 'அமிர்தா விஸ்வ வித்யா பீடம்' வழங்கும், 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சியில் இன்று, அரசு வேலையை பெறுவதற்கான வழிமுறைகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் 'இண்டஸ்டிரியல் சேப்டி' குறித்து, துறை சார்ந்த நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.' டீப் லேர்னிங்'நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய, சிவில் சர்வீசஸ் தேர்வு நிலைகள் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.நேர்முகத்தேர்வு நடைமுறைகள் மற்றும் தேர்வில் சாதிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன் கருத்துரை வழங்கியதோடு, மாணவர்களது சந்தேகங்களுக்கும் நேரலையில் பதில் அளித்தார்.
வரும் காலத்தில், 'டீப் லேர்னிங்' துறையில் நிலவ கூடிய வேலை வாய்ப்புகள், அதற்கு வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து, அமிர்தா விஸ்வ வித்யா பீடம் பேராசிரியர், பினாய் நாயர் விளக்கினார். பல்வேறு தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பணித் திறன்கள் மற்றும் அவற்றை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து, விஜய் ரவி விளக்கம் அளித்தார்.நேரலையில் இன்றுஇன்றைய நிகழ்ச்சியில், டிஜிட்டல் துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்து கிருபா சங்கர், பல்வேறு அரசு வேலை வாய்ப்புகள் குறித்து, நித்யா மற்றும், 'பயர் அண்டு இண்டஸ்டிரியல் சேப்டி' குறித்து, பிரபு ஆகியோர், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். வரும், 17 வரை, தினமும் காலை, 10:00 முதல் 12:00 மணி வரை நடைபெறும்,
இந்த நேரலை நிகழ்ச்சியில் பங்கு பெற மற்றும் நிபுணர்களிடம் இருந்து, உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, www.kalvimalar.com இணையதளத்தில், பெயர், மொபைல் எண், இ -- மெயில் முகவரி ஆகிய தகவல்களை அளித்து, உடனே பதிவு செய்யலாம். இந்நிகழ்ச்சியில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், 'பவர்டு பை ஸ்பான்சர்'களாக பங்கேற்கின்றன.வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜ்ஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன.