தமிழகத்தில் ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்!

தமிழகத்தில் ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்!

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 62 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி , கோடைக் கால விடுமுறைக்கு பிறகு, பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதுள்ள சூழலில், பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறக்கலாம், திறந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive