இனி வாட்ஸ்-ஆப் மூலம் சிலிண்டர்கள் முன்பதிவு செய்யலாம்.. எப்படி?

வாட்ஸ்-ஆப் மூலம் சமையல் சிலிண்டர்களை பதிவு செய்வதற்கான புதிய அம்சத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக வாட்ஸ்-ஆப்பில் 1800224344 என்ற எண் வாயிலாக சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.
வாடிக்கையாளருக்கு புக்கிங்கை உறுதிப்படுத்த ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும். அத்துடன், கட்டணம் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பப்படும்.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யூபிஐ அல்லது இதர டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கட்டணத்தை செலுத்தலாம். அதில், எப்போது சிலிண்டர் கிடைக்கும் என்ற ட்ராக்கிங் வசதியும் பாரத் பெட்ரோலி