தடுப்பூசி மருந்துக்கு எதிராக தன்னை உருமாற்றி கொள்ளும் கொரோனா வைரஸ் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, May 15, 2020

தடுப்பூசி மருந்துக்கு எதிராக தன்னை உருமாற்றி கொள்ளும் கொரோனா வைரஸ் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

தடுப்பூசி மருந்துக்கு எதிராக தன்னை உருமாற்றி கொள்ளும் கொரோனா வைரஸ் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி!


தடுப்பூசி மருந்துக்கு எதிராக தன்னை உருமாற்றி கொள்ளும்  கொரோனா வைரஸ் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி

கொரோன வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதில் இருந்து தப்பிக்கும் வகையில் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனித உடலுக்குள் சென்றதும், கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றி கொள்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தடுப்பூசிகள் செயல்படக்கூடிய பல்வேறு வழிகள் உள்ளன, ஆனால் அவை அனைத்திற்கும் பொதுவானவை என்னவென்றால், அவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களை பாதிப்பில்லாமல் வெளிப்படுத்துகின்றன.

இதனால் உடல் அவற்றை ஆபத்தானது என்று அடையாளம் கண்டுகொள்வதோடு அவற்றை எவ்வாறு எதிர்ப்பது என்பதை அறியவும் செய்கிறது. உடல் தொற்றுநோயைக் கண்டால், தன்னை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியும்

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தகுந்தாற்போல் தன்னை உருமாற்றி கொள்கிறது

வாய், மூக்கு மற்றும் கண்களின் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், ஸ்பைக் என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற புரதத்தின் மூலம் மனித செல்களோடு இணைகிறது. இந்த இணைவு வெற்றிகரமாக நடந்தவுடன், வைரஸ் தனது மரபணுவை மனித செல்களுக்குள் புகுத்தும். மனித செல்களுக்குள் நுழையும், கொரோனாவின் மரபணு, அந்த செல்லை வைரசின் இனப்பெருக்க தளமாக மாற்றுகிறது. இப்போது பாதிக்கப்பட்ட செல், ஒரு வைரசாகவே மாறி, பல்கிப்பெருகிறது.

பொதுவாக வைரசுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரசின் ஸ்பைக் புரதம் குறித்த தகவலை உடலுக்கு அளிக்கிறது. அதனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸ் நுழையும் போது ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, மனித செல்கள் அதனுடன் இணைவதை தவிர்க்கின்றன. ஆனால், கொரோனா வைரசின் இந்த ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

உலகம் முழுவதும், 62 நாடுகளில் 5349 கொரோனா மாதிரிகளை சோதனை செய்த விஞ்ஞானிகள் அதன் மரபணுவில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், இதன் காரணமாக ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தின் தற்போதைய வடிவத்தின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வது, அந்த தடுப்பு மருந்துகளை பயனற்றதாக மாற்றி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால், உருமாற்றம் நடைபெறாத வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, தடுப்பு மருந்துகள் தயாரிப்பவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனோ வைரசில் ஏற்படும் மரபணு மாற்றங்களையும் கருத்தில்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு தொகுப்பாக பிரித்துள்ளனர். அதில் ஒரு தொகுப்பில் உள்ள 788 வகையான வைரசிலும் மற்றொரு தொகுப்பில் 32 வைரசிலும் இந்த உருமாற்றம் நிகழ்ந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Post Top Ad