கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, May 9, 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. உலக அளவில் 80 சதவீத கொரோனா நோயாளிகள் லேசான பாதிப்பு உள்ளவர்களாகவும், மருத்துவமனையில் வைத்து பராமரிக்கும் அளவுக்கு தீவிர தொற்று உள்ளவர்களாக 20 சதவீதம் பேரும் உள்ளனர்.

கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகப்படும் நபரை அல்லது அவரது மருத்துவ பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் நபர்  தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறையில் மாற்றம் செய்து தற்போது புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 டிஸ்சார்ஜ் செய்ய யார் தகுதியானவர்கள்?

* அறிகுறி இல்லை/ லேசான அறிகுறி உள்ளவர்கள் 3 நாட்களுக்கு காய்ச்சல் வரவில்லை என்றால் டிஸ்சார்ஜ்.

* அறிகுறி இல்லை என்றால் மறு பரிசோதனை தேவை இல்லை.

* வீடு திரும்பிய நபர் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

* டிஸ்சார்ஜ் ஆன பிறகு அறிகுறிகள் தென்பட்டால் 1075 என்ற எண்ணை அழைக்க வேண்டும்.

* மிதமான பாதிப்பு -ஆக்சிஜன் உதவி தேவையில்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யலாம்.

* மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைய வேண்டும்.

* தீவரமாக பாதிக்கப்பட்டவரை மீண்டும் பிசிஆர் சோதனைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யலாம்.

* முதல்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு காய்ச்சல் குணமானால் மறு பரிசோதனை தேவை இல்லை.

* அறிகுறியற்றவர்களை வீட்டிற்கு அனுப்பும் முன் பிசிஆர் சோதனை தேவையில்லை.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 17,847 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1307 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1605 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.

Post Top Ad