தமிழ்நாடு மெட்ரிகுலேசன்பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, May 13, 2020

தமிழ்நாடு மெட்ரிகுலேசன்பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு மெட்ரிகுலேசன்பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு மெட்ரிகுலேசன்பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந . க . எண் . 1002 | « 1 / 2020 , நாள் . 12 . 05 . 2020 பள்ளிக்கல்வி - மெட்ரிக்குலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்கள் - பைதான் புரோகிராமிங் ( Python Programme ) - பயிற்சி அளித்தல் - தொடர்பாக . . மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு பைதான் புரோகிராமிங் ( Python Programme ) பயிற்றுவிக்கும் ஒரு முயற்சியாக மெட்ரிக்குலேசன் | மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் இரண்டு வார கால ' Faculty Development Workshop on Problem solving using Python ' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இப்பயிற்சியினை Amphisoft Technologies நிறுவனம் மூலம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மேலும் , பைதான் புரோகிராமிங் ( Python Programme ) மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடதிட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என்றாலும் , உயர் படிப்பில் சமாளிப்பது கடினம் என்பதால் , இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர்கள் சுமார் 300 மணி நேரம் மாணாக்கர்களுக்கு பயிற்சி வழங்கிட ஊக்குவிக்கும் வகையில் Boot Camp ( துவக்க முகாம் ) நடத்தப்படவுள்ளது . பைதான்புரோகிராம் ஒரு பொது நோக்கத்திற்கான மொழியாக இருப்பதால் , இந்த Boot Camp ( துவக்கமுகாம் ) முகாம் ஆசிரியர்கள் , திறமையான மாணாக்கர்களை உருவாக்க முடியும் . மேலும் , Web Developing , Data Analysis Artificial Intelligence மற்றும் Machine Learning and Scientific Computing போன்ற வளர்ந்து வரும் துறைகளுடன் மாணாக்கர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க ஏதுவாக Boot Camp ( துவக்க முகாம் ) வடிவமைக்கப்பட்டுள்ளது . ஆசிரியர்களுக்கான Boot Camp ( துவக்க முகாம் ) 12 நாட்களுக்கு காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை Amphisoft நிறுவன வல்லுநர்களின் நேரடி விரிவுரைகள் நடைபெறும் . அதனைத் தொடர்ந்து E - Box Online Practice Session நடைபெறும் . . . 2 . பயிற்சி அமர்வின் போது ஆசிரியர்கள் சுமார் 10 real time பயிற்சிகளை செய்து முடிப்பர் . நடைமுறையில் அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்த அவர்களுக்கு நேரடி வழிகாட்டல் வழங்கப்படும் . 12 நாட்கள் Boot Camp முகாம் முடிவதற்குள் ஒரு ஆசிரியர் 120 realtime பயிற்சிகளைத் தோராயமாக முடித்திருப்பார் . பங்கு பெற்ற அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும் . இப்பயிற்சியானது + 2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியைப் பொறுத்து மாறுபடும் என தெரிவிக்கப்படுகிறது . மேலும் , பயிற்சி நேரம் குறித்து Amphisoft Technologies நிறுவனம் தெரிவிக்கும் . எனவே , மெட்ரிக்குலேசன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் eboxcolleges . com / tncsereg இணைப்பை கிளிக்செய்வதன் மூலம் Boot Camp ( துவக்கமுகாம் ) பதிவு செய்து பங்கு பெறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது . இப்பயிற்சி தொடர்பாக ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் Dr . Balamurugan , Chief Learning Officer , Amphisoft Technologies , E - mail ID balamurugan @ amphisoft . co . in மற்றும் கைபேசி எண் . 9442019192 க்கு தொடர்பு கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது . மெட்ரிகுலேசன்பள்ளிகள் இயக்குநர் பெறநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் . நகல் 1 . அரசு முதன்மைச் செயலாளர் , பள்ளிக் கல்வித் துறை , சென்னை - 9 அவர்களுக்குப் பணிந்தனுப்பலாகிறது . 2 . ஆணையர் , பள்ளிக் கல்வித் துறை சென்னை - 6 அவர்களுக்குப் பணிந்தனுப்பலாகிறது , 3 . பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்குத் தகவலுக்காகக் கனிவுடன் அனுப்பப்படுகிறது .

Post Top Ad