ஜே.இ.இ., - நீட் தேர்வு தேதி நாளை அறிவிப்பு
'ஜே.இ.இ., எனப்படும், பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி, நாளை அறிவிக்கப்படும்'என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாடு முழுதும், ஜே.இ.இ., எனப்படும் பொறியியல்படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தேர்வுகள், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டன.இந்நிலையில், ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், நாளை அறிவிப்பார். அதைத் தொடர்ந்து, மாணவர்களுடன், 'ஆன்லைன்' வாயிலாக அமைச்சர் உரையாட உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.