சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு
சென்னை: பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகளை இயக்கும்போது சிரமம் ஏற்படாத வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்து பிரிவில் 50 சதவீதம் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிக்கு தொழில்நுட்ப பணியாளர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3584 பேருந்துகளில் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்ற சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொது ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளின் எச்எஃப்சி மற்றும் எச்சி ஆகியவை ஜூன் 2020-க்குள்ளாக முடிவடைக்கின்றன.
எனவே 1,775 பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளதால் மாநகரப் போக்குவரத்து பிரிவில் பராமரிப்பு, பழுது நீக்கும் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பிரிவில் பணிபுரியுபம் பணியாளர்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 50 சதவீதம் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
பணிக்கு திரும்பும் பணியாளர்கள் முகக் கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.
தொழிற்கூடங்கள், பணி செய்யும் இடங்கள், உணவகம், ஓய்வறை, நேரக்காப்பாளர் அறை மற்றும் பண்டக சாலைகளில் கட்டாயம் 3 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேணடும்.
பணியாளர்களுக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive