ஓய்வு வயது உயர்த்தியது ஏன்? யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, May 8, 2020

ஓய்வு வயது உயர்த்தியது ஏன்? யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது?

ஓய்வு வயது உயர்த்தியது ஏன்? யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது?

தமிழகத்து ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் , அலுவலர்கள் நிரந்தரப் பணி இடத்தில் இருப்பவர்களுக்கு ஓராண்டு ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக நீட்டித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள் .

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 07 . 05 . 2020 ன்படி வெளியிடப் பட்டுள்ளது .

யார் யாருக்கு எப்போது இருந்து பொருந்தும் : நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அலுவலர்கள் , ஆசிரியர்கள் , பணியாளர்கள் , ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு பொருந்தும் . 02 . 05 . 2020 முதல் பிறந்த தேதி உடையவர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு உண்டு . அரசாணையில் 31 . 05 . 2020 முதல் என்று குறிப்பிடப்பட்டிருப்பது அந்த மாதத்தின் இறுதி நாளை குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .

முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ளதா ?

 எந்த அறிவிப்பினையும் வெளியிடாத முதலமைச்சர் அவர்கள் இந்த அறிவிப்பினையாவது வெளியிட்டுள்ளார் . வரவேற்பு பயனாளிகளின் மனநிலையை பொறுத்ததாக அமையும் .

29 ஆண்டு காலம் பணியாற்றியவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கிற போது அவர்கள் 30 ஆண்டு முடிக்கும் போது முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள் .

தேர்வுநிலை , சிறப்புநிலை பெறுபவர்கள் ஓராண்டு பணி நீடிப்பதால் அந்த நிலையினை பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்ற
இந்த அறிவிப்பு உடன் வெளி வருவதற்கான காரணம் என்ன ?

 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்ற அதிருப்திக்கு தீர்வு காணும் முயற்சியாக கூட இருக்கலாம் . ஒரே சமயத்தில் இந்த ஆண்டு பணி நிறைவு பெறுபவர்களுடைய முழு ஓய்வூதிய பணப் பயன்களை அனுமதிப்பதற்கான நிதி ஆதாரம் அரசிடம் பற்றாக்குறை உள்ளது என்பதையும் மறுப்பதற்கு இயலாது . அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவதற்குள் நிதிப்பற்றாக்குறையினை தீர்வு கண்டு விட முடியுமா ? என்ற கேள்வியும் எழாமலில்லை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

ஏப்ரல் மாதம் பணி நிறைவு பெற்றவர்கள் மனநிறைவுடன் முழு ஓய்வூதிய பயன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் விடை பெறுவதாக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் . வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கொந்தளிப்பின் உச்சக் கட்டத்திற்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியாது .

95 லட்சம் பேர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வயது முதிர்வும் நிறைவு பெறுகிற வரையில் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு வருகிறார்கள் . ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் , தேர்ச்சி பெறாதவர்கள் , தேர்வு எழுத தயார் படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க தான் முடியுமா ?

 கல்லூரி , பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களைத் தவிர தமிழகத்தில் எந்த ஆசிரியர் சங்கங்களும் ஓய்வு பெறும் வயதை எங்களுக்கு நீட்டித்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடியதாக வரலாற்றில் இடம் பெறவில்லை .

30. 4 - 2020 வரை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 30 . 4 . 2020க்கு முன் ஓய்வு பெற்று 3 1 - 5 - 2020 வரை பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது எனத் தெரிகிறது . அதாவது 2 - 5 - 2020க்கு பிறகு ஓய்வு பெறவுள்ளவர்களுக்கு முழுமையாக ஓராண்டு கிடைக்கும் .

1 - 6 - 2020 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு இரண்டாண்டுகள் கிடைக்கும் அதாவது பணி நீட்டிப்பில் 60 வயது வரை பணி புரியலாம் ) அத்துடன் ப்ரோமோசன் உள்ளிட்டவை சிலருக்கு தாமதம் ஏற்படலாம் . ஏனெனில் ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால் இது ப்ரோமோசனை சிலருக்கு பாதிக்கலாம் . எனினும் 58 வயதில் இருந்து 59 வயதாக ஒய்வு பெறும் வயதை அதிகரித்து இருப்பது தமிழக அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . 

Post Top Ad