அரசு ஊழியர்கள் அனைவரும் சொந்த செலவில்பணிக்கு வர வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள் அனைவரும் சொந்த செலவில்பணிக்கு வர வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் பணிக்கு வர தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக மே 15ம் தேதி வரை 33 சதவீத பணியாளர்களுடன் தலைமைச் செயலகம் இயங்கியது. அவர்களின் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு அதற்கான செலவையும் அரசு ஏற்றுக் கொண்டது.
இந்தநிலையில், நாளை (18ம் தேதி) முதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத அரசுப் பணியாளர்கள், சுழற்சி முறையில் கட்டாயம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர்களின் வசதிக்காக தேவையான போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர்களும் இந்தப் பேருந்து வசதிகளை உரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive