கூகுள் டுயோ செயலியில் புதிய வசதி.. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, May 3, 2020

கூகுள் டுயோ செயலியில் புதிய வசதி..

கூகுள் டுயோ செயலியில் புதிய வசதி..
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் டுயோ செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரி கொண்டு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வசதியை வழங்கும் சேவை கூகுள் டுயோ செயலியில் ‘ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ்’ (Reachable with email address) எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
புதிய சேவை வழங்கப்படும் போது, கூகுள் டுயோ செயலியில் மொபைல் போன் நம்பர் இன்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதே சேவை கூகுள் டுயோ வலைதள பதிப்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. சமீப காலங்களில் இந்த சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
கூகுள் டுயோ செயலியில் இந்த அம்சம் செட்டிங்ஸ் — அக்கவுண்ட் பகுதியின் கீழ் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மற்ற பயனர்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ள வழி செய்கிறது. தற்சமயம் இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. கூகுள் டுயோ ஆண்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல் முகவரி கொண்டு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் வசதி எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Post Top Ad