ஆசிரியர்கள் பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.
விடைத் தாள் திருத்த கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் , பாதுகாப்பான முறையில் ஆசிரியர்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்வுத்துறை இயக்குநர் , ஆசிரியர் சங்க நிர்வாகிகள்டம் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தின் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே மாதம் 2ஆம் வாரத்தில் இதற்கான பணிகள் தொடங்கலாம் என தெரிகிறது . விடைத் நான் இருந்தும் பணிக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.