இளங்கலை மதிப்பெண் அடிப்படையில் எம்.டெக், எம்.சி.ஏ மாணவர் சேர்க்கை

இளங்கலை மதிப்பெண் அடிப்படையில் எம்.டெக், எம்.சி.ஏ மாணவர் சேர்க்கை




சென்னை: 

விஐடி பல்கலைக்கழகத்தில் எம்.டெக் மற்றும் எம்.சி.ஏ படிப்பில் சேருவதற்கு வழக்கமாக நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று காரணமாக அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தாண்டு மேற்கண்ட இரு படிப்புகளுக்கும் இளங்கலை படிப்பில் (UG) பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது.
மாணவர்கள் அனைவரும் www.vit.ac.in என்ற இணையதளம் மூலம், வரும் ஜூன் மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் இமெயில் மற்றும் மொபைல் எண்களை தவிர மற்ற தகவல்களை வரும் ஜூன் 20ம் தேதி வரை திருத்தம் செய்யலாம். கேட் தேர்வு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

 கேட் தேர்வு எழுதாத மாணவர்கள், அவர்களுடைய இறுதி தேர்வுக்கு முன் எழுதிய தேர்வு மதிப்பெண் (UG-pre final year / for M.Tech upto 6th sem and for MCA upto 4th sem) அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். 

மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் விஐடியில் நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக 5 வருட இன்டெக்ரேடட் எம்.டெக் மற்றும் எம்.எஸ்.சி படிப்பில் சேரலாம். 

இதில் மாணவர்கள் சேருவதற்கு வரும் ஜூலை 15ம் தேதி கடைசி நாள். இதுவரை 12ம் வகுப்பு தேர்வு முற்றிலும் முடியாததாலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததாலும் இந்த கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.vit.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive