அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, May 20, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை

அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை
மாணவி அனிதா இறப்பிற்கு பின்பு, 2018 ஆம் ஆண்டு இளையதலைமுறை சார்பாக தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவம், பொறியியல் என அனைத்து மேற்படிப்புகளுக்கும் முன்னுரிமை என்ற சட்டத்தை இயற்றும்படி கேட்டு கொண்டோம். இன்று 21/03/2020 அமைச்சரவையில் முதல்வர் எடப்பாடி அவர்கள் மருத்துவ படிப்பிற்கு முன்னுரிமை என்று அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 
இதில் ஒரு சட்டசிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், அரசு பள்ளி, தனியார் பள்ளி என இட ஒதுக்கீடு அளிக்க சட்டத்தில் வாய்ப்பில்லை. அதற்கு பதில், தமிழக அரசு வேலைவாய்ப்பில் உள்ளது போல், 20% தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று கொள்கை முடிவு எடுத்து சட்டமாக கொண்டு வரலாம். இதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். ஆனாலும், இந்த மகத்தான முயற்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று(21/05/2018) இளையதலைமுறை, சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து அளித்தோம். இதற்குண்டான நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினர். அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை முடிவில் உள்ள சட்ட சிக்கல்களை பற்றியும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கினார்.
இது சம்பந்தமான மற்ற துறை அமைச்சர்களான மருத்துவ கல்வித்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகிய அனைவரின் செக்கரட்டரியை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தோம். அமைச்சர்களின் பார்வைக்கு எடுத்து செல்கிறோம் என வாக்குறுதி அளித்தனர்.
5% மட்டுமே உள்ள அரசு கல்லூரிகளில் 90% தனியார் பள்ளி மாணவர்களே ஆக்கிரமிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாதம் ரூ. 500 பள்ளி கட்டணம் கூட கட்ட முடியாத ஏழை அரசு பள்ளி மாணவரால் எவ்வாறு தனியார் கல்லூரிகளில் ரூ. 50000 என கட்டணம் கட்டி படிக்க முடியும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் cmcell மூலம் அரசை வலியுறுத்த வேண்டுகிறோம். - நன்றி, இளையதலைமுறை

Post Top Ad