ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்வு அறிவிப்பதா? மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் மீண்டும் ஆலோசனை
சென்னை: நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், இன்று மீண்டும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (31ம்தேதி) முடிவடைகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் 5வது கட்டமாக ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.