தமிழகத்தில் முதன்முறையாக கரோனா குணமடைத்தவரிடமிருந்து பிளாஸ்மா தானம்...!!

தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே பிளாஸ்மா தானம் செய்வதற்கான வசதிகள் உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவரிடமிருந்து இருந்து பெறப்படும் பிளாஸ்மா மூலம் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முதலாக சென்னையில் கரோனாவிலிருந்து குணமடைந்த பெண் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் இந்த பிளாஸ்மா தானம் பெறப்பட்டுள்ளது.