
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியை துவக்கினர்.பள்ளிக் கல்வித்துறை சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்து வருகிறது. தேர்வு மையங்களில் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதால், தேர்வு அறையில் 20 பேருக்குப் பதிலாக 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதனால், கூடுதல் வகுப்பறைகள் பயன்படுத்தப்படவுள்ளது. புதிய தேர்வு மையங்களும் அமைக்கப்படவுள்ளன.தேர்வு மையங்களாக செயல்படவுள்ள பள்ளிகளில், ஆசிரியர்கள் தேர்வு அறைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவற்றில், கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.பள்ளி வளாகம் முழுவதும், வகுப்பறைகள், ஆசிரியர்கள் அறை, ஆய்வுக் கூடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.