Unlock 1.0 - புதிய தளர்வுகள் அறிவிப்பு
நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்படுகின்றன. இதுதொடர்பான, உத்தரவுகளை அந்த மாநில அரசு அமைப்புகள் பிறப்பித்துக் கொள்ளலாம்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிற பகுதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளை நிறைவடைகிறது.
இந்த நிலையில், 5-ஆம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஜூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், மால்கள், ஹோட்டல் போன்ற பிற தொழில்கள் ஆகியவற்றையும் ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஜூலை மாதத்தில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக் கூடங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றைத் திறப்பது பற்றி நிலைமையைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மதம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் விஷயத்திலும் நிலைமையைப் பொருத்து பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.
கரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.
*'நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு'
*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
*ஜூன் எட்டாம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத்தலங்கள் ஷாப்பிங் மால்கள் உணவகங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி.
*ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.
*தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு.
*தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
*வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகு திறக்க அனுமதி.
*அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி - கல்லூரிகளைத் திறக்கலாம் - ஜூலை மாதம் இறுதி முடிவெடுக்கலாம்.
*முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
*பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.
*கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.
*அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.
*திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.
*பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.
*சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.
*இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.
*தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.
*மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.
*சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
*பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.
*கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.
*அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.
*திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.
*பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.
*சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்.
*கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி.
*தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்.
*தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சூழலை பொறுத்து திறக்க அனுமதி.
*இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது.
*நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட வகை பிரிவுகளுக்கு மட்டுமே தடை இருக்கும்.
*நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது.
*நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.
*இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு.
*தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.
*மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.
*சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.