அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STSTION SENIORITY முன்னுரிமை யாக எடுத்துக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு..

அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STSTION SENIORITY முன்னுரிமை யாக எடுத்துக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு.. 

G.O.Ms.No.280, Dated 24" June 2020-அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீடும் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

 G.O.Ms.No.280, Dated 24" June 2020-அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீடும் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 

CA Exam - சூழ்நிலைக்கேற்ப தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு.

CA Exam - சூழ்நிலைக்கேற்ப தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு.

கற்றலில் புதிய வழிமுறைகள் - யுனெஸ்கோ அறிக்கை வெளியீடு.

கற்றலில் புதிய வழிமுறைகள் - யுனெஸ்கோ அறிக்கை வெளியீடு. 

ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் சான்றிதழ் சமர்பிக்க 3 மாத காலம் அவகாசம்: தமிழக அரசு ஆணை வெளியீடு

ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் சான்றிதழ் சமர்பிக்க 3 மாத காலம் அவகாசம்: தமிழக அரசு ஆணை வெளியீடு

இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரசுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து!

இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரசுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து!

வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவிப்பு.

வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவிப்பு. 

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

 உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

மும்பையில் தமிழ் வழியில் பாடம் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி.: தமிழக அரசு அறிவிப்பு

மும்பையில் தமிழ் வழியில் பாடம் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி.: தமிழக அரசு அறிவிப்பு 

E - PASS நடைமுறையில் மாற்றம்.

E - PASS நடைமுறையில் மாற்றம். 

10ம் தேதி பட்டினி போராட்டம் தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு.

10ம் தேதி பட்டினி போராட்டம் தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு.

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் - RTI Reply!

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் - RTI Reply! 

விண்வெளியில் புதிய மர்மப் பொருள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

விண்வெளியில் புதிய மர்மப் பொருள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பொருள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
விண்வெளியில் புதிய மர்ம பொருள் ஒன்றை இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் புவிஈர்ப்பு சென்சார் அலைகளைப் பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர்.


இத்தாலியின் பைசா நகரில் உள்ள ஐரோப்பிய புவியீர்ப்பு ஆய்வகத்தில் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது சுமார் 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய இரண்டு பொருட்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவற்றில் ஒன்று கருந்துளையாகவும் மற்றொன்று சிறிய கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

முதலில் கூறப்பட்டது கருந்துளை என்று நிச்சயமாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது நம் சூரியனை விட 23 மடங்கு நிறை உடையது என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது கூறப்பட்ட மர்மப்பொருள் சிறிய கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது சூரியனைப் போல 2.6 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை இரண்டிற்கும் அதிக வேற்றுமை இருப்பதால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பணியிலிருந்து ஆசிரியர்களை பணி விடுப்பு செய்ய கோரிக்கை!

கொரோனா பணியிலிருந்து ஆசிரியர்களை பணி விடுப்பு செய்ய கோரிக்கை!


தூத்துக்குடி மாவட்ட கொரானோ பணியில் விருப்பம் இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை ஈடுபட கட்டாயப்படுத்துவது வருந்தத்தக்க செயலாகும்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் செயல் முறைகள் Roc No DMI/2994/2020  Date.06.2020 படி வெளி மாநிலம்,மற்றும் வெளி மாவட்டத்தில இருந்து வரும் மக்களைத் தடுத்து சோதனை செய்வதற்காக Quarantine location Check Post duty பணிக்கு காலை 7மணி முதல் பிற்பகல் 3 மணிவரையிலும்,3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும்இரவு 10 மணி முதல் காலை 7மணி வரையிலும் (7:00 am to 3:00 pm, 3:00pm to 10:00 pm, 10:00 pm to 7:00am ) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளாரகள்.
                            மேற் கூறிய பணியானது காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த பணியாகும் அவர்களுக்கு சட்டப்படி அதிகாரமும் பாதுகாப்பும் உள்ளது. ஆனால் பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு  எந்தப் பாதுகாப்பும் கிடையாது தற்போது சாத்தான்குளம் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது இந்நிலையில் எந்தப் பாதுகாப்பும் இல்லாத உடற்கல்வி ஆசிரியர்களை பணியில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவது சரியாக இருக்காது.
            ஆசிரியர்கள் எப்பொழுதும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பணிகளையும் மாணவர் நலன் சார்ந்த பணிகளையும் செய்து வருகிறோம். அதற்கு மாறாக பொது இடங்களில் கட்டாயப்படுத்தி பாதுகாப்பு இல்லாத பணிகளில் பணி நியமனம் செய்வது தவறான முன்னூதாரனத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  எனவே மாண்புமிகு முதல்வர் அவர்களும் தலைமைச் செயலர்அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறை ஆணையினை ரத்து செய்து உடற்கல்வி ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
                                                                                                                                                              S.சங்கரப்பெருமாள்.                 
நாள் : 27.06.2020.                                                           மாநிலத் தலைவர்-9382860582

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் கணக்கீட்டு முறை வெளியீடு

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் கணக்கீட்டு முறை வெளியீடு

சென்னை: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்வதற்கான வழிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக மேற்கண்ட தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக சிபிஎஸ்இ தற்போது அறிவித்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த மாணவர்களை எந்த அடிப்படையின் கீழ் தேர்ச்சிபெற்றதாக அறிவிப்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதன் பேரில் மாணவர்கள் தேர்ச்சியை நிர்ணயம் செய்வதற்காக சிபிஎஸ்இ தற்போது வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அது வருமாறு: 

* 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் என்பது, மாணவர்களுக்கு இதுவரை நடத்தி முடிக்கப்பட்ட பொதுத்தேர்வு பாடங்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
* 12ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரையில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு தங்கள் மதிப்பெண்களை மாணவர்கள் உயர்த்திக் கொள்ளும் வகையில் சிறப்புதேர்வு ஒன்று நடத்தப்படும்.
* ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்துவதாக இருந்த தேர்வுகளுக்கு பதிலாக சிறப்பு தேர்வு நடக்கும். விருப்பமுள்ள மாணவர்கள் சிறப்பு தேர்வில் பங்கேற்கலாம்.
* 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குரிய மதிப்பெண்களை கணக்கீடு செய்யும் போது, 3 தேர்வுகளுக்கு அதிகமான பாடங்களை எழுதிய மாணவர்களுக்கு எந்த பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும்.
* பொதுத்தேர்வில் 3 பாடங்கள் மட்டும் எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண், அந்த மாணவர்கள் எழுதிய 3 தேர்வில் எந்த இரண்டு பாடங்களில் அதிக மதிப்பெண் உள்ளதோ அதன் அடிப்படையில் கணக்கிடப்
படும்.
* டெல்லியில் பொதுத்தேர்வு ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டதால், அந்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அவர்கள் பெற்ற செய்முறை தேர்வு மதிப்பெண், அக மதிப்பீட்டு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.
* 10ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை சிறப்பு தேர்வு ஏதும் நடக்காது.

10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாவர்களின் வருகைப்பதிவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.

10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாவர்களின் வருகைப்பதிவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.


10 மற்றும் 11ஆம் பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது - மாணவர்கள் வருகை புரிந்த நாட்கள் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  செயல்முறைகள்.   நாள்: 27.06.2020.

Attendance Entry - DGE Proceedings - Download here...

வருகைப் பதிவேடுகளில் உள்ளவாறான விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன:

1 29.06.2020 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி , தங்கள் கல்வி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிக்குமான பத்தாம் வகுப்பு / பதினோராம் வகுப்பு | +1 Arrear மாணவர்களது வருகைப் பதிவேடு விவரங்களை பூர்த்தி செய்வதற்கான மாணவர்களது முகப்புத்தாட்களை ( Top Sheet ) பள்ளி வாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

2 பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களது வருகைப் பதிவேடுகளில் உள்ள விவரங்களை அரசுத் தேர்வுத் துறையால் அளிக்கப்படும் முகப்புத்தாளில் ( Top Sheet ) Par -A பகுதியினை பூர்த்தி செய்வதற்கு அட்டவணையாளர் ( Tabulator ) ஒருவரும் , மற்றும் Part - B பகுதியினை பூர்த்தி செய்வதற்கு சரிபார்ப்பு அலுவலர் ( MVO ) ஒருவரும் , கூர்ந்தாய்வு அலுவலர் ( SO -தலைமையாசிரியர் நிலை ) ஒருவரும் கொண்ட ஐந்து குழுக்களை , ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்தல் வேண்டும் . பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பிற்கு என தனித்தனி குழுக்கள் அமைக்கப்படுதல் வேண்டும் . மேலும் , மாணவர்களது வருகைப் பதிவேடு தொடர்பான விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றும் பணிக்கென நியமனம் செய்யப்பட்டுள்ள கணினி இயக்குபவர்களை இப்பணிக்கு கூடுதலாக நியமனம் செய்து கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணிக்கு பயன்படுத்துவது போல இரண்டு குழுக்கள் A - Team மற்றும் B - Team என அமைத்து வருகைப் பதிவேடுகளின் பதிவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

10ம் வகுப்பு, பிளஸ் 1 தனித்தேர்வர்கள் கல்வித்துறையின் மவுனத்தால் கவலை

10ம் வகுப்பு, பிளஸ் 1 தனித்தேர்வர்கள் கல்வித்துறையின் மவுனத்தால் கவலை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த தனித் தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் பிரச்னையால், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடக்கவிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, ஒரு பாடத்துக்கான தேர்வும் ரத்தாகி உள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 80 சதவீத மதிப்பெண்ணும், வருகை பதிவின்படி, 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.இதற்கான பணிகளை, அரசு தேர்வுத்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.அதனால், தனி தேர்வர்கள் கவலை அடைந்துஉள்ளனர்.

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களை பொறுத்தவரை, பல வகையாக உள்ளனர். பிற மாநிலங்களில் வசித்தாலும், தங்களின் தாய் மொழி மீதான பற்றுதலால், தமிழ் வழியில் பலர் படிக்கின்றனர்.இவர்கள் படிக்கும் பள்ளிகள், தமிழக பாட திட்டத்தை பின்பற்றுகின்றன. இந்த பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்களாக கருதப்படுகின்றனர்.மேலும், பள்ளிகளுக்கு சென்று படிக்க வசதி இல்லாதவர்களும். பொருளாதார பிரச்னையால் நலிவடைந்த பலரும், வெளியே வேலை பார்த்தபடி,10ம் வகுப்பு தேர்வை தனி தேர்வாக எழுதுவர். எனவே, அவர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில், அனைவருக்கும் தேர்ச்சி என, பள்ளி கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அதேபோல, பிளஸ் 1 தனி தேர்வர்களை பொறுத்தவரை, பிளஸ் 1ல் ஏற்கனவே சில பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் பெற முடியாமல், 'அரியர்' வைத்திருப்பவர்களே, தனி தேர்வர்களாகபங்கேற்கின்றனர்.முதல் முயற்சியில், சில பாடங்களில் தோல்வி அடைந்தாலும், மீண்டும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த அவர்களுக்கும், உரிய வழிகாட்டுதல்களை, அரசு அறிவிக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர், 'வாட்ஸ் ஆப்' குழு

அரசு பள்ளி மாணவர், 'வாட்ஸ் ஆப்' குழு

'ஆன்லைனில்' பாடம் நடத்தும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் துவங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் இருந்தே மாணவர்கள் கற்கும் வகையில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் வகையில், இணையதளத்தில், 'வீடியோ' பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர்களின் மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு, வாட்ஸ் ஆப் குழுக்கள் துவக்கப்பட உள்ளன.

அதன் வாயிலாக, தினமும் பாடக்குறிப்புகளை அனுப்ப வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

கல்வித்துறை அலுவலகங்களில் கொரோனா உஷார் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை

கல்வித்துறை அலுவலகங்களில் கொரோனா உஷார் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை









ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம் ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம் ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்


ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊக்க ஊதியம் வழங்கப்படும். இந்த ஊக்க ஊதியம் ஆசிரியர்களின் பணிக்காலத்தில் 2 முறை வழங்கப்படும். அதேபோல் அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை அட்வான்ஸ் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் ஆசிரியர்கள் குறித்து குறிப்பிடாதது, ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் உயர்வு ரத்து செய்யப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாணையை காட்டி, மாவட்ட கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகின்றனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இது குறித்து தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் ஜோசப் சேவியர், சிவகங்கை மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன் கூறியதாவது

பல ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது

சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு அட்வான்ஸ் ஊதிய உயர்வு மட்டுமே நிறுத்தப்பட்டது.

ஆனால் கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு தர மறுக்கின்றனர். ஏற்கனவே அகவிலைப்படியை நிறுத்திய நிலையில் ஊக்க ஊதிய உயர்வை நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது

இதுகுறித்து முதல்வர், கல்வித்துறை அமைச்சர் துறை இயக்குநர்கள், கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு தெளிவான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம்; 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை

மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம்; 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
திருப்பூர்;ஊரடங்கு நேரத்தில், நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள், 'இ-சஞ்சீவினி' திட்டத்தின் மூலம், 'ஆன்லைன்' வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைகின்றனர்.வீட்டில் இருந்தே, பாதிப்புகளை தெரிவித்து, மருத்துவ சிகிச்சை பெற, மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. 'இ-சஞ்சீவினி' என்ற திட்டத்தின் மூலமாக, 'ஆன்லைன்'ல் தங்களது பாதிப்பு விவரத்தை பதிவு செய்து, டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இத்திட்டத்தில், தினமும், காலை, 10:00முதல், மாலை, 3:00 மணி வரை, மருத்துவ ஆலோசனை பெறலாம்.நோயாளிகள்,www.esanjeevani.opd என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்களது மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். வரப்பெறும் கடவுச்சொல்லை 'டைப்' செய்து, 'இ-சஞ்சீவினி' பக்கத்துக்குள் செல்லலாம்.முழு விவரம், முகவரியை பதிவு செய்து, 'கால் நவ்' என்ற பட்டனை 'கிளிக்' செய்து, இணைப்பில் உள்ள டாக்டர்களிடம் ஆலோசனை பெறலாம். டாக்டர்கள், பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, எடுக்க வேண்டிய மருந்து, மாத்திரை விவரத்தை அனுப்பி வைக்கின்றனர். அதனை, மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தலாம்.தமிழகத்திலேயே, திருப்பூர் மாவட்டத்தில், இந்த சேவையை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்த சேவையால் குணமடைகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கணினி அறிவியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு: யுஜிசி தகவல்

கணினி அறிவியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் வெளியீடு: யுஜிசி தகவல்


உயா்கல்வியில் கணினி அறிவியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்துக்கேற்ப உயா்கல்வி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்ய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்தது. அதன்படி கணிதம், இயற்பியல், தாவரவியல், புள்ளியியல், உளவியல், புள்ளியியல் உள்பட பல்வேறு பாடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.

அந்தவரிசையில் கணினி அறிவியல் படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தை தற்போது யுஜிசி வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இணையதளத்தில் அறியலாம். மேலும், இனி இந்த புதிய பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லாத மாணவர்கள் : ஒலிபெருக்கி மூலம் பாடம் நடத்திய ஆசிரியர்

ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லாத மாணவர்கள் : ஒலிபெருக்கி மூலம் பாடம் நடத்திய ஆசிரியர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் பங்கதி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சுமார் 246 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லை. இதனால் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்தலாம் என்று யோசித்தார்.

அப்போது ஒலிபெருக்கி அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த கிராமத்தில் அதிகமான மாணவர்கள் இருக்கும் இடங்களில் அமைந்திருக்கும் பெரிய மரத்தில் இந்த ஒலிபெருக்கியை கட்டினார்.

அதேபோல் மின்கம்பத்திலும் கட்டினார்.
பின்னர் பள்ளிக்கூட வகுப்பறையில் இருந்து ஆசிரியர்களை மைக் மூலம் பாடம் எடுக்கச் சொல்ல, மாணவர்கள் மரத்தின் அடியில் இருந்து பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதியில் இருந்து தினந்தோறும் இரண்டு மணி நேரம் இப்படி பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக அந்த தலைமையாசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷியாம் கிஷோர் சிங் காந்தி கூறுகையில் ”மாணவர்கள் அதிகமான இடங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி வைத்துள்ளோம். ஏழு ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து மைக் மூலம் பாடம் எடுப்பார்கள். எங்கள் பள்ளில் 246 மாணவர்கள் உள்ளனர். இதில் 204 மாணவர்களிடம் போன் கிடையாது.

தினந்தோறும் காலை 10 மணிக்கு வகுப்பு தொடங்கும். மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது ஏதாவது கேட்க விரும்பினால், அவர்களுடைய கோரிக்கையை யாராவது ஒருவர் செல்போனில் இருந்து எனக்கு அனுப்புவார்கள். அடுத்த நாள் அதற்கான விளக்கம் அளிக்கப்படும்” என்றார்.

இந்த பள்ளிக்கூடத்தின் திறமையை பார்த்து அந்த மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்லிவித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அக்., வரை பள்ளிகள் திறப்பில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகள் கருத்து

அக்., வரை பள்ளிகள் திறப்பில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகள் கருத்து

'பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை' என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான 'பேரன்ட் சர்க்கிள்' நிறுவனம் பள்ளி முதல்வர்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் வாயிலாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

அவர்களின் கருத்துக்கள் வருமாறு:

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் பள்ளிகளை தற்போதுதிறக்க முடியாத சூழல் உள்ளது. தென்மேற்கு பருவமழையால் தொற்று பரவல் அதிகரிக்கும்.வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சவாலான பணி. குறிப்பாக 'பிளே ஸ்கூல், ப்ரீ ஸ்கூல், பிரைமரி ஸ்கூல்' என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாது.

பாடதிட்டங்கள் பாடங்களின் அளவுகள் குறைக்கப்பட வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும்.கொரோனாவுக்கு பிந்தைய நிலைக்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் அக்டோபர் வரை பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு

கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு


படப்பிடிப்பிற்கு வரும்‌ ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள்‌

1. பச்சை வண்ணத்திலுள்ள ஆடைகளைத்‌ தவிர்க்கவும்‌. பிற வண்ண ஆடைகள்‌ அணியும்போது அந்த ஆடைகளில்‌ எந்த பகுதியிலும்‌ பச்சை வண்ணம்‌ இல்லாதவாறு கவனமுடன்‌ அணிந்து வரவும்‌.

2. ஆண்‌ ஆசிரியர்கள்‌ நெருக்கமான கட்டம்‌ போட்ட சட்டைகள்‌, நெருக்கமான கொடு போட்ட சட்டைகள்‌, மினுமினுக்கும்‌ சட்டைகள்‌, பூப்‌ போட்ட மற்றும்‌ கருப்பு நிற சட்டைகளைத்‌ தவிர்க்கவும்‌, கையோடு இரண்டுசட்டைகளைக்‌ கொண்டு வரவும்‌.

3. பெண்‌ ஆரியர்கள்‌ சுடிதார்‌, மினுமினுக்கும்‌ புடவைகள்‌ , பட்டு ஜரிகை புடைவைகள்‌, நீளமான காதணிகள்‌ போன்றவற்றை தவிர்க்கவும்‌. கையோடு இரண்டு புடவைகள்‌ கொண்டு வரவும்‌.

4. ஆண்‌ ஆசிரியர்கள்‌ கண்டிப்பாக Shaving செய்து வரவும்‌.

5. ஆசிரியர்கள்‌ transparent தரநர ஆக இருக்கும்‌ ஆடைகளைத்‌ தவிர்க்கவும்‌.

6. ஆரியர்கள்‌ கட்டாயமாக தங்களது பாடப்பகுதியினை பவர்‌ பாயிண்ட்‌ இல்‌ கொண்டு வரவும்‌.

7. தங்களது பவர்‌ பாயிண்ட்‌  slide size 16:9 wide screen இல்‌ இருக்க வேண்டும்‌.

8. ஆசிரியர்கள்‌ தங்களது பாடப்பகுதியின்‌ இறுதியில்‌ High order thinking மற்றும்‌ middle order thinking  கேள்விகளை சேர்க்கவும்‌.

9. படப்பிடிப்பிற்கு வரும்‌ ஆசிரியர்கள்‌ ஒப்பனைப்‌ பொருட்களாகிய சீப்பு மற்றும்‌ face powder ஆகியவற்றைக்‌ கொண்டு வரவும்‌.

கொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்

கொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்


பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை மையத்தில் குரு நான் வைரஸ் தொற்று நோய் சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள 22 ஆசிரியர்கள் மற்றும் 2 மேற்பார்வையாளர்கள் ஆணையர் அவர்களின் ஆணையின்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 வருகைப்பதிவேட்டில் 25.06.2020 அன்று காலை கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிக்கு வராமல் உள்ளனர் மண்டபம் ஒன்றில் தொலைபேசி ஆலோசனை மையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன தனியார் பணியினை மீது மீது உள்ள அக்கறை இன்மை காட்டுகிறது.

எனவே இந்நிகழ்விற்கு தனியார்கள் தகுந்த விளக்கத்தை குறிப்பாணை கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் அளிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது தவறினால் விளக்கம் ஏதும் இல்லை என கருதி உரிய மேல் நடவடிக்கைக்கு தலைமை இடத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை!

ஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை!

விருப்பமில்லாத ஆசிரியா்களை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் மாயவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, மாயவன் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைப் பதிய வேண்டும்.

பணிக்கு வராதவா்கள் மீது இடைநீக்கம் உட்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது ஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அதனால் இந்த முடிவைக் கைவிட்டு விருப்பமுள்ள ஆசிரியா்களை மட்டும் கரோனா தடுப்புப் பணிகளில் பயன்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும்.

மேலும், சா்க்கரை நோய், இதயநோய் உட்பட உடல்நலக் கோளாறு உள்ள ஆசிரியா்கள், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், தடுப்புப் பணியில் விருப்பமில்லாதவா்கள் மற்றும் பெண் ஆசிரியா்கள் ஆகியோரை கரோனா பணியில் ஈடுபட மாநகராட்சி கட்டாயப்படுத்தக்கூடாது என்றாா் அவா்.

பெரும்பாலான ஆசிரியர்கள் மிகையாக பெற்ற வீட்டு வாடகைப்படியினை திரும்ப செலுத்தி விளக்கம் அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

பெரும்பாலான ஆசிரியர்கள் மிகையாக பெற்ற வீட்டு வாடகைப்படியினை திரும்ப செலுத்தி விளக்கம் அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் வீட்டு வாடகைப்படியினை வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத இடங்களிலுள்ள பள்ளிகளுக்கும் வகை 3 ன் வட்டத்திற்குட்பட்ட தலைமையிடமாகக் கொண்டு வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக கணக்கிட்டு பட்டியல் சமர்ப்பித்து காசாக்கியுள்ளனர் எனவும் , மேலும் கருவூல அலுவலகத்தால் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டதில் குறிப்பாக கடத்தூர் , பாப்பாரப்பட்டி , மாரண்டஅள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத தேதிகளில் வழங்கப்பட வேண்டிய வீட்டு வாடகைப்படிக்கு பதிலாக வகை 3 ல் உள்ள வட்ட தலைமையிடத்திற்குண்டான வீட்டு வாடகைப் படியினை அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக பெற்று வழங்கியுள்ள கீழ்கண்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளியில் உள்ள பணியாளர்களுக்கு ( ஆசிரியர்கள் உட்பட ) 01.10.2017 முதல் மிகையாக பெற்று வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை தவறுதலாக வீட்டு வாடகைப்படி எதன் அடிப்படையில் பெற்று வழங்கப்பட்டது என்பதற்கான விளக்கம் மற்றம் செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக வேறு பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்று வழங்கியிருப்பின் அவர்களும் மேற்கண்ட அறிவுரைகளின் படி மிகையாக வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கும் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கும் சார்ந்த சார்நிலை கருவூல அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


Flash News : CBSE 10th And 12th Public Examination Canceled!

Flash News : CBSE 10th And 12th Public Examination Canceled!

ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல்.

"டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேர்வுகளை நடத்த இயலாத சூழல் உள்ளது.

பதவியும் ஊதியக்குழுக்களின் ஊதிய நிர்ணயமும்!

பதவியும் ஊதியக்குழுக்களின் ஊதிய நிர்ணயமும்!
 

2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம்..! மத்திய அரசு அறிவிப்பு

2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம்..! மத்திய அரசு அறிவிப்பு

2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து நேரடி வரிவிதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது நாடுளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:2018-19 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகசாம் வரும் ஜூலை 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 2019-20 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கா கால அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முழு செலவையும் அரசே ஏற்கும்!

அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முழு செலவையும் அரசே ஏற்கும்!
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு இம்மாத இறுதிக்குள் காலாவதியாகவிருந்தது. இந்தநிலையில், அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்படடுள்ளது. கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவக் காப்பீட்டைப் பயன்படுத்தி சிகிச்சை பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டள்ளது.

புற்றுநோயிலிருந்து விடுபட மீன் சாப்பிடுங்கள்.

புற்றுநோயிலிருந்து விடுபட மீன் சாப்பிடுங்கள்.
அசைவ உணவு வகைகளில் ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை விட கடல் உணவுகள் ஆரோக்கியமானது என்கி றார்கள் மருத்துவர்கள். கடல் உணவான மீன் உணவுகளின் ஆரோக்கியம் அற்புதமானது என்பதை உணர்ந்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆடு, கோழி இறைச்சியை விட மீன் உணவுகள் தீங்கில்லாதது என்பதோடு இதில் சத்துகளும், கொழுப்பு அமி லங்களும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் அசைவ உணவுகளில் ஒன்றான மீன்களில் இருந்து மாத்திரை கள் தயாரிக்கப்படுகிறது. மனிதனின் மூளை சிறப்பாக செயல்பட கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த கொழுப்பு அமி லங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பதாக ஆய்வு ஒன்றில் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். மைண்ட் என்னும் மனநலம் தொடர்பான தொண்டு நிறுவனம் ஒன்றும் உண்ணும் உணவுக்கும் அவரது மன நலத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளது. தொடர்ந்து மீன் உணவு வகைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்த நோய் வரும் அபாயம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவித்திருக்கிறது.

அதிகம் தீங்கு விளைவிக்காத மீன் உணவு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தைப் பாதுகாக் கிறது. மன அழுத்தம் வராமல் காக்கிறது. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு என்றும் இதைச் சொல்லலாம். முக்கியமாக குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் புற்றுநோய் என்பது பெரும்பாலோரைத் தாக்கும் நோயாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே நேரத்தில் சில ஆரோக்கியமான உணவுகளைத் தவறாமல் எடுத்துகொள்ளும் போது இயற் கையாகவே புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

அதன் படி பார்த்தால் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் காஸ்ட்ரோ என்ட்ரோலஜி மற்றும் ஹெபடாலஜி இதழில் வெளி யிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நாம் உண்ணும் உணவில் மீன்களை அடிக்கடி சேர்த்துக் கொண்டேவந்தால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சியை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், சர்வதேச புற்றுநோய் மையமும் இணைந்து நடத்தி யுள்ளது. வாரத்திற்கு மூன்று முறையாவது மீன் எடுத்துக் கொள்ள வேண்டும். மீன் உணவு வகைகளோடு மீன் எண்ணெய் சேர்த்து எடுத்துகொளவதும் நல்லது. மீன் இயற்கையாகவே புற்று நோயை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. மீன் உணவுகளைத் தொடர்ந்து எடு த்துக் கொண்டு வந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதை 12 % வரை குறைக்கும் வாய்ப்புள்ளது என்கிறார் கள் மருத்துவர்கள்.

இந்த ஆராய்ச்சியில் மீனில் அடங்கியுள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களுக்கும், பெருங்குடல் புற்றுநோய்க் கும் இடையேயான தொடர்பு ஆராயப்பட்டது. ஒமேகா -3 பாலி அன்சாச்சுரேட்டட் (polyunsaturated) கொழுப்பு அமிலங்களின் வெளிப்பாடு பெருங்குடல் புற்றுநோய் வீரியத்தைk குறைக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது என்பது இதன்மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வந்தது. முதலில் இந்த ஆய்வு மீன் உட்கொள்வது மற்றும் நீண்ட சங்கிலி n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் (polyunsaturated) கொழுப்பு அமிலங்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையேயான தெளிவற்ற நிலையில் அது தொடர்பாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆனால் தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஐரோப்பிய வருங்கால விசாரணையின் தரவுப் பதிவேட்டை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில் கலந்து கொண்ட நபர்களின் உணவுப் பழக் கத்தை ஆராய்ந்தார்கள்.

அப்போது அதிகமாக மீன் சாப்பிட்டு வந்தவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் தாக்கம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் மீனில் உள்ள n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் வெளிப் பாடு தான் என்பதும் கண்டறியப்பட்டது. மீன்களில் அதிகளவு புரோட்டீன் மற்றும் விட்டமின் டி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. புற்றுநோய் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, மீன்களில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பைபோலார் டிஸ் ஆர்டர் (இருமுனை மனக் கோளாறு) போன்ற பிற மன நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மீன் உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்க, மாரடைப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

மீன் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் ஒமெகா 3 என்னும் கொழுப்பு அமிலத்தை இயற்கையாக தருகிறது மத்திமீன். இதை குழம்பாக செய்யாமல் வாணலியில் வறுக்கும் போது இதிலிருந்து ஒமெகா எண்ணெய் வடிவதைப் பார்க்கலாம். மீன் உணவுகள் குடல் புற்றுநோய் மட்டுமல்லாமல் கண்களையும் பாதுகாக்கிறது. மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகள் உடலில் தங்குவதும் குறைகிறது. மீன் உணவு வகைகளை வறுப்பதும், எண்ணெயில் பொரிப்பதையும் தவிர்த்து குழம்பாக செய்து சாப்பிடுவது அதிக நன்மைகளைத் தரும் என்கிறார்கள் மருத்துவர்கள். வளரும் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளைப் பழகும் போது அதிகமாக கடல் வாழ் உணவுகளைக் குறிப்பாக மீன் உணவுகளைப் பழக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மூளை சம்பந்தமான நோய்களான மன அழுத்தம், அல்சைமர் நோய், டிமென்ஷியா, டயாபெட்டீஸ் மற்றும் கவனக் குறைவால் மிகை செயல்பாடு கோளாறு போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

CM Press release today!

CM Press release today!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை அசரடித்த முதல்வர்... எடப்பாடியின் அதிரடி சரவெடி அறிவிப்பு..!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை அசரடித்த முதல்வர்... எடப்பாடியின் அதிரடி சரவெடி அறிவிப்பு..!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. மேலும், தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். அதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சையும் சேர்க்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேசமயம், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அதனை 2021-ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்துக்காக முதல் கட்டமாக தமிழக அரசு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – யுஜிசி குழு பரிந்துரை..!

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – யுஜிசி குழு பரிந்துரை..!

இந்தியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்துசெய்து அதற்கு முந்தைய செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு யுஜிசி குழு பரிந்துரைத்துள்ளது.

இறுதித்தேர்வுகள் ரத்து:
கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து பல்கலைக்கழக மாணவர்களை மதிப்பிடுவதற்கான மாற்று வழிகளை பரிந்துரைக்க உயர் கல்வி கட்டுப்பாட்டாளரால் யுஜிசி குழு அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான குழு, திருத்தப்பட்ட கல்வி அட்டவணையின் படி பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள இறுதி செமஸ்டர் தேர்வுகள், லட்சக்கணக்கான மாணவர்கள், அதிகாரிகள் வெளிப்படும் அபாயத்தால் நடத்த முடியாது என்று கூறியுள்ளது.

எனவே ஒவ்வொரு மாணவரின் கடந்தகால செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இறுதித் தேர்வுக்கான மதிப்பெண்கள் விரிவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தங்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படுவதில் மகிழ்ச்சியடையாத மாணவர்களுக்கு, தொற்றுநோய் குறையும் போது பின்னர் தேர்வுகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க முடியும் என்று குழு மேலும் கூறியது.



இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், யுஜிசி உயர்கல்வி நிறுவனங்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்த வார இறுதியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிந்துரைகள் 40 க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்களுக்கும், நூற்றுக்கணக்கான அரசு, தனியார் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளாகக் கருதப்படுகின்றன. பழைய மாணவர்களுக்காக ஜூலை மாதத்திலும், ஆகஸ்ட் மாதத்தில் புதிய தொகுதிகளுக்காகவும் திட்டமிடப்பட்ட புதிய அமர்வு அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் யுஜிசி குழு பரிந்துரைத்துள்ளது.

ஆசிரியர்களை கொரோனா பணியில் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்..!! தமிழக அரசுக்கு வைத்த அதிரடி கோரிக்கை..!!

ஆசிரியர்களை கொரோனா பணியில் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்..!! தமிழக அரசுக்கு வைத்த அதிரடி கோரிக்கை..!!

பாதுகாப்பு நலன் கருதி ஆசிரியர்களை வீட்டிலிருந்தபடியே கொரோனா பணியில் பயன்படுத்த அரசு முன்வர வேண்டுமென்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெருந்தொற்று கொரோனா வைரஸைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசினை பாராட்டுகிறோம். கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ள வைரஸ் தொற்று, மக்களை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது.

கல்வித்துறையில்பணிபுரியும் ஆசிரியர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பயன்படுத்திவருவதால் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு பணியான Street warrior பணியிலும் , மண்டல அலுவலகங்களில் செயல்படும் Tele counselling மையத்திலும் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர். Tele counselling-மையத்தில் தினம் காலை 8 மணியிலிருந்து 2 மணி வரையும் , பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என்று சிப்ட் முறையில் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா பரவலுக்கு மத்தியில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு, பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்ற சொல்வது ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பேரிடர்காலங்களில் ஆசிரியர்கள் தானாகவே முன்வந்து சேவைபுரிந்துவருகிறார்கள் என்றால் அதுமிகையாகாது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அசாதாரணச் சூழலில் ஆசிரியர்களை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் உதவிகல்வி அலுவலர்கள் தலைமையாசிரியர்கள் மூலமாக விருப்பமில்லாத ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வரசொல்வது,ஏற்கனவே அச்சத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மனஉளைச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், ஆசிரியர்களின் உடல்நிலை, மாற்றுத்திறனாளிகள், 50 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு நோய், ரத்தஅழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரும் மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பாதுகாப்புக்கருதி சொந்த ஊருக்கு சென்றுள்ள பல ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தி பணிக்குவரச்சொல்லி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம்.மேலும், உடல்நிலைப் பாதிக்கப்பட்டோரை பயன்படுத்துவதால் நோய் தொற்று விரைந்து பரவும் அபாயம் உள்ளது.

எனவேஎப்போதும் பேரிடர் காலத்தில் அரசுக்கு உறுதுணையாக ஆசிரியர்கள் இருந்துவருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, Tele counselling போன்ற பணி வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பணி என்பதால் வீட்டிலிருந்தபடியே அந்தபணியை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், இல்லையேல் அவர்கள் பணிசெய்யும் பள்ளிகளிலே ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி தினந்தோறும் 30 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிசெய்ய ஆவனசெய்ய வேண்டும் என அரசை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

பரிதாப நிலைக்குள்ளான 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள்!

பரிதாப நிலைக்குள்ளான 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள்!

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் பொது தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் கோவையை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்தனர். அந்த மாணவர்களுக்கான தனி தேர்வு நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தேர்வுகளும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்து தேர்வு எழுத தயாராக இருக்கும் தனி தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கபட்டு உள்ளனர். அவர்களில் சில மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.


மேலும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது போல தனி தேர்வர்களுக்கான தேர்வு நடத்தபடும் அல்லது நடைபெறாது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த மாணவர்கள் கேட்டுகொண்டனர்.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணைக்கு தடை கோரியும், கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க கோரியும் தொடரப்பட்ட  வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருகிறது.

 தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கம் சார்பாக வக்கீல் விஜயானந்த் ஆஜராகி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். இதற்காக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அடுத்த வாரம் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பள்ளியில் யார் Tc எழுத வேண்டும். - Cm Cell பதில்

பள்ளியில் யார் Tc எழுத வேண்டும். - Cm Cell பதில்

நான் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக இருக்கிறேன் . தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பளிகளில் பயிலும் மாணவ , மாணவிகள் 12 ம் வகுப்பு முடித்து செல்லும்போது , அவர்களுக்கு வழங்க வேண்டிய மாற்று சான்றிதழ்கள் ஆசிரியரல்லா அலுவலக பணியாளர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டும் . ஆனால் விதிகளுக்கு முரணாக முதுகலை ஆசிரியர்களை மாற்று சான்றிதழ் எழுத்துவதற்கு , தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர் .

எனவே இது சார்ந்து பள்ளிக்கவ்வி இயக்குனர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . மேலும் மாற்றுசான்றிதல்கள் ஆசியர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா ? அல்லது அலுவலகப் பணியாளர்களைக் கொண்டு எழுதப்பட வேண்டுமா என்ற தெளிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



உதவி தலைமை ஆசிரியர் பதவி எதன் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்...CM Cell Reply

உதவி தலைமை ஆசிரியர் பதவி எதன் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும்...CM Cell Reply

அரசாங்க திட்டங்கள் மூலம் ஜெருசலேம் யாத்திரைக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு" ஆட்சேபனை இல்லை சான்றிதழ் "பெறுவதிலிருந்து விலக்களித்து அரசாணை வெளியீடு.

"அரசாங்க திட்டங்கள் மூலம் ஜெருசலேம் யாத்திரைக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு" ஆட்சேபனை இல்லை சான்றிதழ் "பெறுவதிலிருந்து விலக்களித்து அரசாணை வெளியீடு.

"அரசாங்க திட்டங்கள் மூலம் ஜெருசலேம் யாத்திரைக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு" ஆட்சேபனை இல்லை சான்றிதழ் "பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

NOTIFICATION.

In exercise of the powers conferred by the proviso to Article 309 of the Constitution of India, the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973.

2. The amendment hereby made shall be deemed to have come into force on the 27th January 2020.

AMENDMENT.

In the said Rules, in rule 24-A, after the fourth proviso, the following proviso shall be added, namely:- "Provided also that the Government Servants proceeding on Jerusalem Pilgrimage through Government Schemes are exempted from obtaining "No Objection Certificate"."

தமிழகத்தில் தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்ய முடிவு?

தமிழகத்தில் தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்ய முடிவு?


*தமிழகத்தில் தற்போதுள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்ய முடிவு?- முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு என தகவல்.

*அந்தந்த மாவட்ட எல்லைகளை மூடவும், மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்.

Flash News : GO : 279 , DATE : 24.06.2020 - ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

Flash News : GO : 279 , DATE : 24.06.2020 - ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

30-6-2020 அன்று காலாவதியாகும் ஊழியர்களுக்கான ABSTRACT MEDICAL AID - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், 2016 - 1-7-2020 முதல் 30-6-2021 வரை இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு - உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.


Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 24 ) மேலும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 24 ) மேலும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 24.06.2020 ) இன்று 2,865 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை -

திருவண்ணாமலை -

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

மாவட்ட வாரியான பாதிப்பு.( 24.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 1

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்!

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்!
 புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் , ' என , தகவல் உரிமை சட் டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது .

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம் மத் திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர் .

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது . இந்த திட்டத்தில் மேற்குவங்கம் , திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை .

 தமிழகம் ஏப் . , செயல்படுத்தினாலும் , இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை . இதனால் ஓய்வூதிய பணப்பலன் 2003 1 ல் 16 களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர் .

இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது . இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் , ஓய்வூதிய நிதி ஒழுங் காற்று மற்றும் மேம்பாட்டு ஆணை யத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டி ருந்தார் .

அதற்கு , ' புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய் யவில்லை ; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான் , ' என ஆணையம் பதில ளித்துள்ளது . இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்து வதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ; இதனை செயல்படுத்த வேண்டு மென , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர் .

ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் - காத்திருக்கும் ஆபத்துகள்!

ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் - காத்திருக்கும் ஆபத்துகள்! 

எந்த பொருளை வாங்கினாலும் கேஷ்-பேக்! எதற்கு இந்த கேஷ்-பேக்? பாதிக்குப் பாதி கூட இல்லாத விலையில் ஒரு பொருளை விற்க முடியுமா? இது எப்படி சாத்தியம்? இதனால் அந்த நிறுவனங்கள் எப்படி இலாபம் ஈட்டுகிறது? நம்மில் எதனை பேருக்கு இந்த கேள்விகள் மனதிற்குள் எழுந்திருக்கும்! இதோ அதற்கான விடையங்கள். 
இந்த உலகலத்தில் எதுவுமே சும்மா கிடைக்காது. அனைத்திற்கும் பின்னாடி ஒரு மறைமுக லாபம் இருக்கிறது. 50% ஆஃபர் விலையென்றால் அது ஸ்டாக் கிளியரன்ஸ் என்று அறிந்த நமக்கு, இந்த கேஷ்-பேக் ஒரு கண்கட்டி வித்தை என்று அறியாதது வருத்தப்பட வேண்டிய விஷயம். 

இந்த கேஷ்-பேக் முறையில் பொருட்கள் நமக்கு எளியமுறையில் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று நாம் அனைவரும் நினைத்து வாங்கி கொண்டிருக்கின்றோம். அனால் இதன் மறுபக்கத்தில் எப்படிப்பட்ட சிக்கலில் நாம் சிக்கிக் கொள்கிறோம் என்பதை யாரும் சிறிதும் யோசித்து பார்ப்பதில்லை. ஆன்லைன் கேஷ்-பேக் சூத்திரத்தின் முதல் வேலையே உங்களுக்குத் தேவையே இல்லாத APP-ஐ உங்களுக்குத் தேவையுடையதாக மாற்றுவதே! அடுத்து நீங்க அதை அன்இன்ஸ்டால் செய்யாமல் பார்த்துக்கொள்வது! 
அதற்கு ஆன்லைன் நிறுவனங்கள் எடுக்கும் முயற்சியில் முதற் கட்டமாக APP-களை இன்ஸ்டால் செய்வதற்கு "முதல் ஆர்டர் முற்றிலும் இலவசம்" என்று விளம்பரப்படுத்தி மக்களிடம் ஆசை காட்டி ஆர்வத்தை தூண்டிவிட்டு டவுன்லோட் செய்ய வைப்பதே. நாமும் ஆர்வத்தோடு ஆசையாக டவுன்லோட் செய்து முதல் ஆர்டரை இலவசமாக பெறுவோம். இது முடிந்ததும் 'இவ்வளவுக்கு பொருட்கள் வாங்கினால் இவ்வளவு கேஷ்-பேக்" என்று விளம்பரங்களை அனுப்பி ஆர்வத்தை தூண்டுவார்கள். அதையும் நாம் வாங்குவோம்! கேஷ்-பேக் பணம் நம்முடைய பேங்க் அக்கௌன்ட்டிற்கு பணமாக வராது. 

அதற்கு மாறாக எந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செஞ்சு பொருட்களை வாங்கினீர்களோ அதே APP- ல் பேலன்ஸாக கேஷ்-பேக் ஆன பணம் இருக்கும். இதனால் அந்த APP-ஐ அன்இன்ஸ்டால் செய்ய மனதில்லாமல், இருக்குற கேஷ்-பேக் பணத்தை செலவு செய்ய வேறொன்றை திரும்ப ஆர்டர் செய்து வாங்குவோம். அதற்கான கேஷ்-பேக் அதே மாதிரி அவர்களுடைய APP- ல் சேரும். சூழ்ச்சியில் அகப்படும் நிலைமை இதற்கு அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்ட APP- ற்கும் உங்களுக்கும் இடையில் இன்னொரு APP அறிமுகம் செய்கிறார்கள். 

அதுதான் பேமென்ட் கேட்வே கான்செப்ட்! அந்த ஆப் வழியாக பணம் செலுத்தினால் இவ்வளவு கேஷ்-பேக் அல்லது ஆஃபர்னு விளம்பரம் செய்கிறார்கள். நாமும் அதை இன்ஸ்டால் செய்து பணப்பரிவர்த்தனை செய்கிறோம். இப்பொழுது உங்களுடைய இன்னொரு பகுதி பணமும் இரண்டாவதாக ஒரு APP- ல் பேலன்ஸா சேமிப்பாகும். பின்பு அந்த APP-களையும் பொருட்களை வாங்க பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றோம். 

இப்பொழுது இரண்டு APP-களில் கேஷ்-பேக் பணம் இருப்பதால் அதை அன்இன்ஸ்டால் செய்ய நம் மனம் இடம் கொடுப்பது இல்லை! இப்படி நமக்கே தெரியாமல் நம்மை அவர்களுடைய APP- ற்கு அடிமையாக்கி விடுகிறார்கள். சில நாட்களுக்கு பிறகு உங்களுக்கு கொடுத்த 50% ஆபர் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கடைகளில் வாங்குகின்ற அதே விலைக்கே வாங்க வைத்து விடுவார்கள். இதன் மறுபக்கத்தில் நமக்கு காத்திருக்கும் ஆபத்து என்னவென்றால், இந்த APP- களை மொபைலில் இன்ஸ்டால் செய்யும் பொழுது நம்முடைய கான்டாக்ட், ஸ்டோரேஜ், கால், மெஸேஜ், பிக்ச்சர் போன்றவைகளை மேனேஜ் செய்துகொள்ளலாம் என்று சிறிதும் யோசிக்காமல் சில அனுமதிகளை அந்த APP- ற்கு கொடுக்கின்றோம். 
அறிவியலின் அதீத வளர்ச்சியின் விளைவாக, மற்றவர்களுடைய இரகசியங்களை அவர்களின் அனுமதி இல்லாமலேயே கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் இருந்து திருடும் இக்காலத்தில், அந்த APP-களுக்கு அனுமதி கொடுத்த பின் APP நிறுவனம் நம்முடைய மொபைலில் இருக்கின்ற அனைத்து விஷயங்களையும் தங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாமல் எப்படி இருப்பார்கள்! நம்முடைய மொத்த தொடர்புகளும் அவர்களின் மற்ற பயன்பாட்டிற்கு டேட்டா-பேஸாக உதவ ஆரம்பித்துவிடும். உங்களுடைய வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் என்று அனைத்து பயன்பாட்டையும் அறிந்துகொண்டு உங்களுக்கு என்ன தேவை, எது தேவையில்லை என்று ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் விளம்பரங்களை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். 

 நம்முடைய டேட்டாக்களை மற்ற நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் விற்று பணமாக்கி கொள்கிறார்கள். நமக்கு தேவையான விளம்பரங்களை போட்டு விளம்பர நிறுவனங்களிடம் இருந்து பணம் சம்பாதித்து கொள்கிறார்கள். மேலும், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவங்களுக்கு மிகப்பெரிய மறைமுக இலாபம் என்னவென்றால், ஷோரூம் வாடகை, ஏசி, மின்சாரம் போன்ற செலவுகளெல்லாம் இல்லை. நேரடியாக ஃபேக்டரியில் இருந்து பாதி விலைக்கு வாங்கித்தான் நமக்கு விற்பனை செய்கிறார்கள். நண்பர்களே, அநேக ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் கேஷ்பேக் என்னும் கவர்ச்சியான முறையை நமக்கு அறிமுக படுத்தி, நம்மை அவர்களுக்கு அடிமைப்படுத்த முயற்சிக்கின்றன. எந்த ஒரு APP-யும் மொபைலில் இன்ஸ்டால் செய்வதற்கு முன் நிதானமாக யோசித்து இன்ஸ்டால் செய்து பயன் பெறுங்கள். 


காலாண்டு தேர்வை ரத்து - காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகள் - குழு பரிந்துரை!

காலாண்டு தேர்வை ரத்து - காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகள் - குழு பரிந்துரை!

தமிழகத்தில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது இந்த நிலையில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தற்போது ஜூன் மாதம் முடிவடையும் நிலையிலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. அதுமட்டுமின்றி இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதும் நிலைமை ஓரளவுக்கு சரியானால் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் கல்வித் துறை ஆணையர் பிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு கல்வி ஆண்டு தொடங்குவது குறித்த பரிசீலனைகளை தமிழக அரசு கேட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குழு மாணவர் நலன் மற்றும் கற்றல் கற்பித்தல் ஆகியவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளது. அந்த அறிக்கையில் செப்டம்பர் மாதம் வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வை ரத்து செய்து, காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது, பாடத்திட்டங்களை குறைப்பது, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Recent Posts

Total Pageviews

Blog Archive