1முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் Ncert தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை
👉அனைத்து என்சிஇஆர்டிதொலைக்காட்சி சேனல்களிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம்வகுப்பு வரையிலான இணைய வழிகற்றல் மூலம் பாடங்களைஒளிபரப்புவதற்காக, என்சிஇஆர்டி–யும், ரோட்டரி இந்தியாவும்புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
👉மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க் முன்னிலையில் டிஜிட்டல்முறையில் கையெழுத்திட்டுள்ளன.
👉இணை வழி கற்றலை மேலும்பயனுள்ளதாக்கும் வகையில், அனைத்து தேசிய கல்வி, ஆராய்ச்சிகுழுமத்தின் (NCERT) தொலைக்காட்சிஅலைவரிசைகளிலும், முதலாம் வகுப்புமுதல் பன்னிரண்டாம் வகுப்புவரையிலான, மின் கற்றலுக்கானபாடங்களை ஒளிபரப்புவதற்காக, என்சிஇஆர்டி–யும், ரோட்டரிஇந்தியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தம்ஒன்றில், மத்திய மனித ஆற்றல்மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் நிஷாங்க் முன்னிலையில்டிஜிட்டல் முறையில் இன்று புதுடெல்லிகையெழுத்தானது. இந்த டிஜிட்டல்நிகழ்ச்சியில் கல்வி மற்றும்எழுத்தறிவுத் துறைச் செயலர் அனிதாகர்வால் பங்கேற்றார்.
👉என்சிஇஆர்டி-க்கும் ரோட்டரிகிளப்புக்கும் இடையே இந்தபுரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளதை அறிவிப்பதுகுறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகமத்திய மனித ஆற்றல்மேம்பாட்டுத்துறை அமைச்சர்தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநிலவுகின்ற சூழலிலும், ரோட்டரிஇந்தியா ஹ்யூமானிடி ஃப்வுண்டேஷன்அமைப்பும் என்சிஇஆர்டி-யும்இணைந்து மத்திய மனித ஆற்றல்மேம்பாட்டுத் துறையின்வழிகாட்டுதலுடனும், ஆதரவுடனும்ஒன்றிணைந்து, மின்கற்றல், என்சிஇஆர்டி ஒப்புதல் பெற்ற பாடத்திட்டங்களுடன் நாடு முழுவதிலும்உள்ள குழந்தைகளைச் சென்று சேரவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும்என்று அமைச்சர் நம்பிக்கைதெரிவித்தார்
👉ஒன்றாம் வகுப்பு முதல்பன்னிரண்டாம் வகுப்பு வரைஅனைத்து பாடங்களுக்குமானபாடத்திட்டங்களை மின் கற்றல்மூலமாக கற்றுக்கொள்ளும் வகையில், ஹிந்தி மொழியில் வடிவமைத்துரோட்டரி இன்டர்நேஷனல் வித்யா தான்2.0 என்ற திட்டத்தின் கீழ் என்சிஇஆர்டி-யிடம் அளிக்கும் என்று தெரியவந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சிஅடைவதாக அமைச்சர் கூறினார்.
👉இந்தப் பாடங்கள் நல்ல உயர்ந்த தரம்
கொண்டவையாக உள்ளன என்றும், இது நமது குழந்தைகள்அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகஇருக்கும் என்றும் மத்திய அமைச்சர்கூறினார். இதுமட்டுமல்லாமல், சிறப்புத்தேவைகள் உள்ள குழந்தைகளுக்காகபாடங்களை அவர்களுக்கேற்றவகையில் வடிவமைத்து ரோட்டரிஇன்டர்நேஷனல் அளிக்கும். முதியோர்கல்வித் திட்டத்திற்கான அனைத்துப்பாடங்களையும் ரோட்டரிஇன்டர்நேஷனல் வழங்கும். ஆசிரியர்களுக்கான பயிற்சி மின்கற்றலுக்கான பாடங்களையும் ரோட்டரிஇன்டர்நேஷனல் அளிக்கும் என்றும்அமைச்சர் கூறினார்.
👉புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்விவரங்கள் குறித்து ரோட்டரிஇன்டர்நேஷனல் இயக்குநர் கமல்சாங்வி தெரிவித்ததாவது:
👉என்சிஇஆர்டி தொலைக்காட்சியுடன்ஒப்பந்தம்: என்சிஇஆர்டி 12 தேசியதொலைக்காட்சி சேனல்கள் மூலமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வகுப்புவரையிலான வகுப்புகளுக்கானபாடத்திட்டங்கள் ஒளிபரப்பப்படும். இதற்கான பாடங்கள் ஜூலை 2020 முதல் கிடைக்கவேண்டும். இந்தப்பாடங்கள் என்சிஇஆர்டிவரையறையின் படி உள்ளதாஎன்பதைச் சரிபார்த்து, என்சிஇஆர்டிஒப்புதல் அளிக்கும்.
👉தீக்ஷா செயலியுடனான ஒப்பந்தம்: மின் கற்றலுக்கான இந்தப் பாடங்கள்மத்திய அரசின் தேசிய அலைபேசிசெயலியான தீக்ஷா மூலமாகவும்கிடைக்கும். இந்தப்பாடங்கள்அனைத்தும் ஹிந்தி மொழியிலும், பஞ்சாபி மொழியிலும் ஏற்கெனவேதயாரிக்கப்பட்டுவிட்டன. எனவே சுமார்10 கோடி மாணவர்கள் பயன்பெறும்வகையில், 12 மாநிலங்கள் யூனியன்பிரதேசங்களில் இவற்றை உடனடியாகசெயல்படுத்த முடியும்.
👉இதற்கான அறிவுசார் உரிமைரோட்டரியிடமிருக்கும். இதுஎன்சிஇஆர்டி-க்கும் அளிக்கப்படும். இதனால் என்சிஇஆர்டி இதைஅனைத்து மொழிகளிலும்மொழிபெயர்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட மாநில எஸ்சிஇஆர்டி, அடுத்த சில மாதங்களில் இதைநடைமுறைப்படுத்தலாம்.
👉1 முதல் 12ம் வகுப்பு வரையிலானபாடங்களை நாங்கள் பலருடன்இணைந்து மின் கற்றலுக்காகவடிவமைத்துத் தயாரித்துள்ளோம். இதை நாங்கள் தேசத்திற்குஇலவசமாக வழங்கஉத்தேசித்துள்ளோம். பள்ளிக்குச்சென்று அவர்கள் பயிலும்பாடத்திட்டங்கள் அனைத்தையும்வீடுகளிலிருந்து கற்கும் முறையில் ஒருதீர்வாக இது இருக்கும். மின் கற்றல்துறையில் ரோட்டரி அமைப்புக்குமிகப்பரந்த அனுபவம் உண்டு. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறுஇடங்களில், 30 ஆயிரத்துக்கும்மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் மின்கற்றலுக்கான மென்பொருள் மற்றும்ஹார்டுவேர் வசதிகளை ரோட்டரிஏற்கனவே செய்து கொடுத்துள்ளது.
இவ்வாறு கூறினார்.