10th , 11 th Public Exam 2020 - விடைத்தாள் சேகரிப்பு மற்றும் ஒப்படைப்பு தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு.
மார்ச் / ஏப்ரல் -2020 பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான இரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்குரிய காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாட்களை பெறுதல் தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டது.
10 மற்றும் 11 ம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்குறிய விடைத்தாட்கள் சேகரிப்பு தொடர்பாக மாணவர்களையோ அல்லது மாணவர்களது பெற்றோர்களையோ எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது.
மேலும் விடைத்தாள் சேகரிப்பு பணிகளுக்கோ ஒப்படைக்கும் பணிகளுக்கோ மாணவர்களையோ , அவர்களது பெற்றோர்களையோ பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.