பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணிக்கு 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பான பணிக்கு 18 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் நடிமுறையில் இருந்து வரும் பாடத்திட்டங்களை குறைக்க கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய 18 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக நான்கு கல்வியாளர்கள் மற்றும் கல்வி துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என 18 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த குழு ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய சூழலில்மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என்றும், முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு இந்த முடிவை உரிய நேரத்தில் எடுக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.