கொரோனா தடுப்பு பணியில் 400 ஆசிரியர்கள் நியமனம்!
தனிமைப்படுத்தப்பட்ட வீடு களை கண்காணிக்க வார்டு அள வில் தன்னார்வலர்கள் , மாநகராட்சி அதிகாரிகள் , போலீஸார் நியமிக் கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் முறையாக வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின் றனாரா என களத்துக்கு சென்று ஆய்வு செய்யவும் , வார்டு அளவில் அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைக்கவும் மாநகராட்சி முழுவதும் உள்ள 200 வார்டுகளில் தலா 2 மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் வீதம் 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் , தங்கள் ஆய்வு விவரங்களை மாநகராட்சியின் கரோனா தொடர் பான இணையதளத்தில் தினமும் பதிவேற்றவும் மாநகராட்சி உத்தர விட்டுள்ளது.