தமிழகத்தில் 50 சதவீத 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. ஆசிரியர்கள் அதிர்ச்சி.!!

தமிழகத்தில் 50 சதவீத 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. ஆசிரியர்கள் அதிர்ச்சி.!!
10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்தனர்.

சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி என அரசு பள்ளி ஆசிரியர்கள் தகவல்கள் தெரிவித்தனர். காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் தகவல் வெளியானது.

10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி தான் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

தேர்ச்சி விவரத்தை தெரிவிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெறவில்லை என செய்தி ஒளிப்பரப்பானது. செய்தி எதிரொலியாக, எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி என அறிவித்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive