அரசு பள்ளி மாணவர், 'வாட்ஸ் ஆப்' குழு
'ஆன்லைனில்' பாடம் நடத்தும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் துவங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் இருந்தே மாணவர்கள் கற்கும் வகையில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் வகையில், இணையதளத்தில், 'வீடியோ' பாடங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர்களின் மொபைல் போன் எண்கள் பெறப்பட்டு, வாட்ஸ் ஆப் குழுக்கள் துவக்கப்பட உள்ளன.
அதன் வாயிலாக, தினமும் பாடக்குறிப்புகளை அனுப்ப வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.