நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு சீல்

நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு சீல்

கோவை வெரைட்டி ஹால்  ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கடந்த 2 தினங்களாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு பிரேம் என்பவர் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் வட்டாட்சியர் அருள்முருகன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு சீல் வைத்தனர். ஆனால் நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை என்று பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive