பெரும்பாலான ஆசிரியர்கள் மிகையாக பெற்ற வீட்டு வாடகைப்படியினை திரும்ப செலுத்தி விளக்கம் அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, June 27, 2020

பெரும்பாலான ஆசிரியர்கள் மிகையாக பெற்ற வீட்டு வாடகைப்படியினை திரும்ப செலுத்தி விளக்கம் அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.

பெரும்பாலான ஆசிரியர்கள் மிகையாக பெற்ற வீட்டு வாடகைப்படியினை திரும்ப செலுத்தி விளக்கம் அளிக்க முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் வீட்டு வாடகைப்படியினை வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத இடங்களிலுள்ள பள்ளிகளுக்கும் வகை 3 ன் வட்டத்திற்குட்பட்ட தலைமையிடமாகக் கொண்டு வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக கணக்கிட்டு பட்டியல் சமர்ப்பித்து காசாக்கியுள்ளனர் எனவும் , மேலும் கருவூல அலுவலகத்தால் பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டதில் குறிப்பாக கடத்தூர் , பாப்பாரப்பட்டி , மாரண்டஅள்ளி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் வகை 4 ல் உள்ள வரையறுக்கப்படாத தேதிகளில் வழங்கப்பட வேண்டிய வீட்டு வாடகைப்படிக்கு பதிலாக வகை 3 ல் உள்ள வட்ட தலைமையிடத்திற்குண்டான வீட்டு வாடகைப் படியினை அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக பெற்று வழங்கியுள்ள கீழ்கண்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவரும் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளியில் உள்ள பணியாளர்களுக்கு ( ஆசிரியர்கள் உட்பட ) 01.10.2017 முதல் மிகையாக பெற்று வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை தவறுதலாக வீட்டு வாடகைப்படி எதன் அடிப்படையில் பெற்று வழங்கப்பட்டது என்பதற்கான விளக்கம் மற்றம் செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மேற்கண்டவாறு அரசாணைக்கு மாறாக வகை - 4 ற்கு பதிலாக வகை 3 ன் படி வீட்டு வாடகைப்படியினை தவறுதலாக வேறு பள்ளி தலைமையாசிரியர்கள் பெற்று வழங்கியிருப்பின் அவர்களும் மேற்கண்ட அறிவுரைகளின் படி மிகையாக வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படியினை பிடித்தம் செய்து அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான விவரத்தினை செலுத்து சீட்டு நகலுடன் இவ்வலுவலகத்திற்கும் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கும் சார்ந்த சார்நிலை கருவூல அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


Post Top Ad