சூரிய கிரஹண காலத்தில் செய்ய வேண்டியது என்ன - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, June 15, 2020

சூரிய கிரஹண காலத்தில் செய்ய வேண்டியது என்ன

சூரிய கிரஹண காலத்தில் செய்ய வேண்டியது என்ன
சென்னை:இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம் ஜூன் 21ம் தேதிக்க நடக்க உள்ளது. அன்றைய தினம் பகல் 12:00 மணிக்கு சர்வ பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம் 21ம் தேதி காலை 10:19க்கு துவங்கி பகல் 12:00 மணிக்கு உச்சம் பெற்று 1:45க்கு நிறைவு பெறுகிறது. இந்த கிரஹணம் தமிழகத்தில் 50 சதவீதம் மட்டுமே தெரியும்.கிரஹணம் காரணமாக காலை 5:45க்கு சந்த்யாவந்தனம் செய்ய வேண்டும். காலை 10:20க்கு ஸ்நானம் செய்து காயத்திரி ஜபம் செய்ய வேண்டும். பகல் 12:00 மணிக்கு சர்வ பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். கிரஹணம் முடிந்ததும் மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டும்.மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.துர்க்கை அம்மனுக்கு வெள்ளை மொச்சையும், ராகு பகவானுக்கு கருப்பு உளுந்து பயிறு வைத்தும் அர்ச்சனை வழிபாடு செய்ய வேண்டும். கிரஹண காலத்தில் செய்ய வேண்டியது:வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தும் போது அவற்றின் மீது தர்ப்பை புல்லை போட வேண்டும்கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்திற்காகவும் வெளியே வரக்கூடாதுகிரகணம் முடிந்த பின் வீட்டை சுத்தப்படுத்தி சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

Post Top Ad