கொரோனா தாக்கத்திற்கு பிறகான பள்ளிகளில் கற்றல் முறையில் மாற்றம் இருக்கும் - மத்திய பள்ளிக் கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, June 6, 2020

கொரோனா தாக்கத்திற்கு பிறகான பள்ளிகளில் கற்றல் முறையில் மாற்றம் இருக்கும் - மத்திய பள்ளிக் கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால்



கொரோனா தாக்கத்திற்கு பிறகான பள்ளிகளில் கற்றல் முறையில் மாற்றம் இருக்கும் என்று மத்திய பள்ளிக் கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் அமைந்துள்ள அசோக பல்கலைக்கழகம் சார்பில் கொரோனா தாக்கத்திற்கு பிந்தைய பள்ளிகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் மத்திய மனிதவளத்துறையின் பள்ளி கல்விக்கான செயலாளர் அனிதா கார்வால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் கல்வி பயிலும் 24 கோடி மாணவர்களுக்கும், புதிய கல்விமுறையை உள்வாங்குவதில் சற்று தடுமாற்றத்தை சந்திப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளளர்.

பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு முன்னெச்சரிக்கையாக, சமூக இடைவெளி கடைபிடிப்பு, முகக்கவசம் அணிதல், பள்ளிகளை முறையாக பராமரித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அனிதா கார்வால் கூறியுள்ளார்.



மேலும் வகுப்பறை கற்றல் முறையில் இருந்து வேறுபட்டு கற்கும் முறை மாணவர்களும், ஆசிரியர்களும் இடையே புதிய சூழல் உருவாகும் எனவும், மாணவர்களின் மனநிலையை சோதித்த பிறகே கற்றல் முறைக்கு பழக்கப்படுத்த முயற்சி எடுக்கப்படும் என்றும் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வழியிலான கல்வி கற்றல் முறையை மேலும் தரமான வகையில், அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் சேன்று சேர தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் கற்கும் விதத்திலும் மாற்றம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அனிதா கார்வால் சுட்டிகாட்டியுள்ளார். முதலில் மாநிலங்களுக்கு பாடப் புத்தகங்களை வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், சில மாநிலங்களில் புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், பள்ளிகள் திறக்கும் தேதியை, அந்தந்த மாநிலங்களில் நிலவும் சூழலுக்கேற்ப சம்மந்தப்பட்ட மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், அதில் மத்திய அரசு தலையிடாது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயல்களில் பெரும்பாலான பள்ளிகள் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது என்று பள்ளிக் கல்விக்கான செயலாளர் அனிதா கார்வல் தெரிவித்துள்ளார்.

Post Top Ad