மாற்றுச்சான்றிதழ் இன்றி அரசு பள்ளியில் அனுமதி சேர்க்கை அறிமுகம்
![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/70/13/f1/7013f1e9ebfd327a3f60812e9f967139f91a386cb3022f7c33146a4baebdc7d4.jpg)
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் நடராஜன், மணிவாசகம் ஆகியோர் தனியார் பள்ளிகளின் நெருக்குதலால் குழந்தைகளின் கல்வி பாழாகும் என்பதால், அச்சமின்றி அரசு பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் இன்றி மாணவர் சேர்க்கை செய்ய புதிய விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தி, அந்த விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பினால் அனுமதி சேர்க்கை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய முறை பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.