E - PASS நடைமுறையில் மாற்றம்.
தமிழகத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, 'இ -- பாஸ்'நடைமுறை தொடரும்
என, அரசு அறிவித்திருப்பது, பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.இதில், பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால், 'இ- - பாஸ்' நடைமுறையை
மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
இன்று முதல், ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்லவும்,
வெளி மாநிலங்களுக்கு செல்லவும், 'இ- - பாஸ்' அவசியம் என, அரசு
அறிவித்துள்ளது.
'இறப்புக்கு செல்ல விரும்புவோர், இறந்தவரின் ரத்த சொந்தமாக இருக்க
வேண்டும். இறந்தவரின் இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
'திருமணத்திற்கு செல்பவரும், திருமணம் செய்து கொள்ளும் குடும்பத்தினரின்,
ரத்த சம்பந்த உறவாக இருக்க வேண்டும்'என, பல நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளன.
சிலர் தங்களின் திருமணத்தில், ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் பங்கேற்க
வேண்டும் என, விரும்புகின்றனர்.அதுபோன்ற நபர்கள், 'இ -- பாஸ்' கிடைக்காமல்
சிரமப்படுகின்றனர்.
மேலும், அவசர தேவைக்கு செல்ல விரும்புவோரும், 'இ -- பாஸ்' கிடைக்காததால்,
விதியை மீறி செல்கின்றனர். அதனால், நோய் பரவுவதாக கூறப்படுகிறது.இதைதடுக்க,
'இ -- பாஸ்' வழங்கும் நடைமுறையில், அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்து உள்ளது.இது குறித்து, அதிகாரிகள் சிலர் கூறியதாவது:அரசு
வழங்கும், 'இ -- பாஸ்'களில், 'கியூஆர் கோடு' உள்ளது. எனவே, வெளி மாவட்டம்
செல்ல விரும்பும் அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி, 'இ -- பாஸ்'
வழங்கலாம்.மாவட்ட எல்லையில், 'இ -- பாஸ்' வைத்திருந்தால் மட்டுமே, உள்ளே
அனுமதிக்க வேண்டும்.
'கியூ ஆர் கோடை ஸ்கேன்' செய்யும் போதே, அவர் மாவட்டத்திற்கு வந்தது
உறுதிப்படுத்தப்பட்டு, அனைத்து துறையினருக்கும், தெரிவிக்கப்பட
வேண்டும்.அவர் எங்கு செல்கிறாரோ, அங்கு அவரை பரிசோதனை செய்வதுடன்,
தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்; இது எளிதாக இருக்கும்.தற்போது, 'இ --
பாஸ்' வழங்க மறுப்பதால், பெரும் பாலானோர், இரு சக்கர வாகனம் உட்பட ஏதேனும்
வாகனத்தில் செல்கின்றனர்.போலீஸ் சோதனை சாவடிகள் எங்கு உள்ளதோ, அதற்கான
மாற்று வழியில் சென்று விடுகின்றனர்.இதுபோல் வருவோரை, மாவட்ட
நிர்வாகத்தால், கண்காணிக்க முடிவதில்லை. இதுபோன்ற நபர்கள், நோய் தொற்றுடன்
வந்தால், அவர் செல்லும் பகுதியில், நோய் பரவல் ஏற்படுகிறது.
எனவே, அரசு, 'இ -- பாஸ்'வழங்கும் நிபந்தனைகளை தளர்த்தி, அனைவரையும்
அனுமதித்து, அவர்களை தனிமைப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு
செய்தால், நோய் பரவலை தடுக்கலாம்.திருட்டுத்தனமாக மாவட்டங்களுக்குள்
நுழைவது, போலி, 'இ -- பாஸ்' தயாரிப்பது, விற்பது போன்ற முறைகேடுகளையும்
தடுக்கலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.