வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவிப்பு.
வங்கியில் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2020 தேர்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்), பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கான அதிகாரிகள், (ஆர்ஆர்பி) அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நாளை தொடங்கி ஜூலை 21 வரை ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.ஐபிபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் பல்வேறு நிலை தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது.இது பல்வேறு இடஒதுக்கீட்டுக்கான பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன் தேர்வுப் பயிற்சியையும் நடத்துகிறது. ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி ஆட்சேர்ப்புக்கான முன் தேர்வு பயிற்சி ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 29 வரை நடைபெறும். இருப்பினும், இது தேர்வுக்கு முந்தைய பயிற்சியை ரத்து செய்யலாம் என்று அறிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக, தேர்வர்களின் பாதுகாப்பிற்காக, இந்த காலகட்டத்தில் பயிற்சி நடத்தப்படாமல் போகலாம் என்று ஐபிபிஎஸ் தெரிவித்துள்ளது.முதல்நிலை தேர்வானது செப்டம்பர் / அக்டோபரில் நடைபெறும். ஆனால் தேர்வு தேதிகளை ஐ.பி.பி.எஸ் முடிவு செய்யவில்லை. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த ஆட்சேர்ப்பில் 43 பிராந்திய கிராமப்புற வங்கிகள் பங்கேற்கின்றன